வியாழன், 7 ஜூன், 2012

ஆணாதிக்கக் கற்பனைகள் படைத்தளித்த கடவுள் கற்பனைகள்

கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க...

 - மகிழ்நன் http://www.unmaionline.com/new/
டவுள் கற்பனைதான் எல்லாம் அறிந்த, முழுமை பெற்ற, அன்பால் நிறைந்த என்று கருதப்படும் உங்கள் கடவுள், நீங்கள் நம்பும் கடவுள் மனித இனத்தின் சரிபாதி பங்கான பெண்ணை வெறுப்பதையும், பெண்கள் மீதான வன்மத்தை கக்குவதையும் பாருங்கள். கருஞ்சட்டைக்காரனும், செஞ்சட்டைக்காரனும் பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்று பேசும் வேளையில் எல்லாம் வல்ல இறைவனுக்கு பெண்களுக்கு உள்ளமுண்டு, அவர்கள் ரத்தமும், சதையும், உணர்வும் ஊரிப்போன மனிதர்களே என்பதுகூட தெரியாதா?

கிறித்துவம்
இறைமக்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருக்கும் ஒழுங்குக்கேற்ப, சபையில் பெண்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும், அவர்களுக்குப் பேச அனுமதியில்லை. மாறாகத் திருச்சட்டம் கூறுவது போல அவர்கள் பணிந்திருக்க வேண்டும். அவர்கள் எதையேனும் அறிய விரும்பினால், அதை வீடில் தங்கள் கணவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளட்டும். பெண்கள் திருச்சபையில் பேசுவது வெட்கத்திற்குரியதாகும்.
(1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம்- 33-35)
பெண்கள் மீது எத்தனை வன்மம் பார்த்தீர்களா?  பெண்களுக்கு சுய அறிவே இருக்காதா? இப்படியான வன்மத்தோடு எந்த தலைவனாவது பேசினால் இன்று அவர் நிலைமை  என்ன? மகளிர் அமைப்புகள் சும்மா விடுமா?  திராவிடர் கழகம் சும்மாவிடுமா? திராவிடர் இயக்க தோழர்கள் சும்மா விடுவார்களா? பெண்ணியவாதிகளோ, பொதுவுடமைவாதிகளோ சும்மா விடுவார்களா?
ஏசாயா 40 அதிகாரம், 8 வசனத்தின் படி..
புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது. நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
பைபிளை நம்பும் எவராவது கர்த்தராகிய இயேசு கிறித்துவின்  சொல்லை இந்த வசனத்தை படித்தபின் மறுக்க முடியுமா? மறுத்தால் மெய்யான கிறித்துவராக இருக்க முடியுமா? ஆக, நம்மிடம் கடவுளின் வார்த்தைகள் என்றும் அழிக்க முடியாததென்றும், பெண்கள் சபையில் பேசுவது அத்துமீறலென்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன. இந்தச் சொல்லை இன்று எந்த நாட்டு கிறித்துவனும் நம்புவதில்லையே,  பெண்கள் இன்று தாராளமாக படிக்கிறார்களே.. கடவுளின் சொல்லை அத்துமீறும் துணிச்சல்  கிறித்துவர்களுக்கு எப்படி வருகிறது. தாங்கள் நம்பும் கடவுள் _ கற்பனை என்பதால்தானே அல்லது தாங்கள் நம்பும் கடவுள் - உண்மையில்லை என்பதால்தானே..
பைபிளிலும் குரானிலும் மனுதரும சிந்தனை
நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்; ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்கு தலைவர் கிறித்து, கிறித்துவுக்கோ தலைவர் கடவுள்.
(1 கொரிந்தியர் 11 அதிகாரம், 3 வசனம்)
பெண்களை இழிவுப்படுத்துவதில் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்ற ரீதியில் மனுநீதியில் சொல்லப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாசகத்தோடு எந்தளவுக்கு பைபிள் ஒத்துப்போகின்றது என்பதை பாருங்கள்
பால்யத்தில் தகப்பனுக்கும், திருமணத்திற்கு பின் கணவனுக்கும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. (அத் 5. சு.148)
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (அத் 9. சு.17) என்று மனுநீதி சொல்கிறதென்றால் பைபிள் அதற்கு ஆலோசனை கூறுகிறது.
அவ்வாறே பெண்கள் பின்னற் சடை, பொன், முத்து, விலையுயர்ந்த ஆடைகள் ஆகியவற்றால் தங்களை அணி செய்து கொள்ளாமல், நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணிய வேண்டும். (1 திமோத்தேயு  அதிகாரம் 2: வசனம் 9) இந்த ஆணாதிக்க மத நிறுவனர்களின் ஆதிக்க அட்டூழியம் குரானிலும் தொடர்கிறது
ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் (குரான் 2:282)
ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் (குரான் 4:34)
கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். (புஹாரி 3237)
குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். (குரான் 2:233)
தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள், ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் (குரான் 3:14)
இப்படியான சமநிலை சமூகத்திற்கு எதிராக மானுட குலத்திற்கு எதிராக சிந்தித்தவர் எல்லாம் வல்ல இறைவனாக இருப்பாரா? அல்லது பைபிளை தமது நலனுக்காக அன்றைய காலக்கட்டத்தில்  ஆணாதிக்க சிந்தனை படைத்த கயவர்களாக இருப்பார்களா? இந்த சொல்லுக்கு சொந்தக்காரர் எல்லாம் வல்ல இறைவன்தான் என்ற கருத்து கற்பனையாகத் தான் இருக்க வேண்டும் அல்லது உங்கள் கடவுள் கயவனாக இருக்க வேண்டும்...சரிதானே..
இதற்குபிறகு பெண்கள் இந்த கயமைத்தனம் படைத்த கடவுளர்களின் பக்தர்களாக இருக்க வேண்டுமா?
இவையெல்லாம் திரிக்கப்பட்டவை; இந்த வசனங்களுக்கும், வாசகங்களுக்கும் அப்பாற்றப்பட்டவர் கடவுள் என்று கூறி தப்பித்துக் கொள்ள முயலலாம். ஆனால், சமூக எதார்த்தத்தில் இந்த வாசகங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் பலப்பல...
முதன்முதலில் உருவாக்கப்பட்ட சட்டம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுத்தது, 1920 வரை இந்த நிலைதான் நீடித்தது.  1956 தனது முத்திரையாக ஏற்றதையும்,  அதையே1957 தொடங்கி அமெரிக்கா தனது ரூபாய் நோட்டில்  “In God we Trust”  என்று அச்சிட்டிருப்பதையும் கூறி பெருமை கொள்பவர்கள் ஏன் இந்த தகவல்களையும் சேர்த்து சொல்வதில்லை. (1956 க்கு முன் அமெரிக்கர்கள் யாரும் கடவுளை நம்பவில்லையா என்று  கேள்வி கேட்டுவிடக் கூடாது). இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1921 இல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக் கான வாக்குரிமை ஆண்களை போலவே வழங்கப்படுகிறது. அதுவும் கற்ற, பணக்கார பெண்களுக்கு மட்டுமே. ஆண்களுக்கும் அன்றைய சூழலில் இருந்த வாக்குரிமை இதுபோன்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1947 இல் தான் அனைத்து பெண்களுக்கும் இந்தியாவில் வாக்குரிமை அங்கீகரிக்கப்படுகிறது. இவை மத நூல்கள் செலுத்திய கருத்தியல் செல்வாக்கினால் அல்லாமல் வேறென்ன? இத்தனை ஆண்டுகளாக பெண்கள் பட்ட துன்பத்திற்கு இழப்பீடென்ன பெண்கள் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க துணிவோமா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக