வியாழன், 7 ஜூன், 2012

Solar விமானம் வெற்றிகரமாக மொராக்கோவில் தரையிறங்கியது!

Viruvirupu,

Casablanka, Morocco: A solar energy plane landed in Morocco yesterday (Tuesday), completing the world’s first intercontinental flight. The Solar Impulse took off from Madrid at 0322 GMT on Tuesday and landed at Rabat’s International airport after a 19-hour flight.

The Solar Impulse project began in 2003 with a 10-year budget of €90m.”The flight was absolutely wonderful but I almost did not enjoy it because I told myself that Andre and I have the responsibility to bring this aircraft to Morocco,” the pilot said.

நம்மூரில் மின் பற்றாக்குறையை சமாளிக்க சோலார் எனர்ஜி (சூரிய சக்தி) சாதனங்களை பயன்படுத்த முயன்று கொண்டிருக்க, நேற்று (செவ்வாய்க்கிழமை) சோலார் எனர்ஜியில் இயங்கும் விமானம், தனது முதலாவது இன்டர்கன்டினென்டல் பயணத்தை முடித்துக்கொண்டு, மொரக்கோவில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

இந்த சோலார் எனர்ஜி பிளேன் நேற்று 0322 GMT நேரத்தில் ஸ்பெயினின் மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 19 மணி நேர தொடர் பறத்தலின்பின், மொராக்கோவின் ரபாட்ஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தரையிறங்கியுள்ளது. சுவிட்சலாந்து நாட்டு பைலட் பெட்ரான்டு பிக்கார்டு விமானத்தை செலுத்தினார்.
சக விமானியும், சோலார் பிளேன் திட்டத்தின் கோ-ஃபவுன்டருமான ஆன்ட்ரே போஷ்பர்க், “இந்த விமானம் இப்போது பகலிலும் இரவிலும் பறக்க தயார். இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பலாம் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
சோலார் சக்தியில் விமானத்தை பறக்க வைக்கும் ப்ராஜெக்ட், 2003-ம் ஆண்டு 90 மில்லியன் யூரோ பட்ஜெட்டுடன் துவங்கப்பட்டது. 10 ஆண்டு திட்டம் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்கள். இதோ 9-வது ஆண்டில் முதலாவது இன்டர்கான்டினென்டல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தரையிறங்கியிருக்கிறது.
ப்ராஜெக்ட் முடியும் அடுத்த ஆண்டு (2013) முதல் தடவையாக உலகத்தைச் சுற்றிவரும் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
“மொரக்கோவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து வெளியே வந்த சுவிஸ் பைலட் பெட்ரான்டு பிக்கார்டு, “இன்யை பயணம் மிகச் சுகமாக இருந்தது. ஆனால் அதை என்ஜாய் பண்ண முடியாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் பெரிய பொறுப்பு என் தோளில் இருந்தது. இப்போது எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது. நான் மிக நிம்மதியாக உணர்கிறேன்” என்றார்.
டெக்னிகலாக பார்த்தால், இந்த விமானம் 12,000 சோலார் செல்களின் சக்தியில் பறக்கிறது. சூரிய சக்தியை இந்த செல்கள் அப்சார்ப் பண்ணி, விமானத்தைப் அப்-லிஃப்ட் பண்ண வைக்கும் சக்தியாக மாற்றுகிறது. இந்த சோலார் செல்கள் சார்ஜ் பண்ணப்பட்டு, பின் சக்தியாக மாற்றப்படுவதால், எப்போதுமே சூரிய ஒளி இருக்க வேண்டியது அவசியமில்லை. அதனால்தான் பகலில் மட்டுமன்றி, சூரிய ஒளி கிடையாத இரவிலும் பறக்க முடிகிறது.
நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது, சோலார் விமானத்தின் முதலாவது இன்டர்கான்டினென்டல் பயணம் என்று எழுதியிருந்தோம். விமானம் இதற்குமுன் சிறுசிறு பயணங்களை மேற்கொண்டது. முதலாவது சோதனை பயணம், ஏப்ரல் 2010-ல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. அது சுவிட்சலாந்துக்கு உள்ளேயே பறந்த பயணம்.
முதலாவது வெளிநாட்டு பயணம், கடந்த மாதம் (மே) சுவிட்சலாந்தின் மேற்கு நகரமான பேயர்ன்னில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரசல்ஸ் நோக்கி மேற்கொள்ளப்பட்டது. (இரண்டு விமான நிலையங்களும், ஏர்-ட்ராஃபிக் அதிகம் இல்லாதவை) இந்த பயணத்துக்காக, 13 மணி நேரப் பறத்தலின் பின் பத்திரமாக தரையிறங்கியது விமானம்.
சுவிஸ்ஸில் இருந்து பெல்ஜியத்துக்கு 13 மணிநேர பயணம் என்றதும், உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்குமே.. ஆம். வேகம் மிகவும் குறைவு. அந்தப் பயணத்தின் சராசரி வேகம், ஹைவேயில் நாம் காரைச் செலுத்தும் வேகத்தைவிட குறைவாக, மணிக்கு 70 கி.மீ.மாத்திரமே.
பொதுவாக பேயர்ன்னில் இருந்து ப்ரசல்ஸ் செல்லும் கமர்ஷல் விமானங்களின் பறக்கும் நேரம், 1 மணியைவிட சற்று அதிகம். சோலார் பிளேன் அதைவிட 10 மடங்கு அதிக நேரம் எடுக்கிறது.
ஆனால், இது ஆரம்பம்தான். விமானத்தால் இன்டர்நேஷனல் பயணத்தையும், இன்டர்கன்டினென்டல் பயணத்தையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். இனித்தான், வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக