நித்தியானந்தா மடத்து வீர நங்கைகள், மஃப்டியில் அன்ன நடை!
Viruvirupu
சரணாலயத்தில் இருந்து பறவைகள் வெளியேறத் துவங்கிவிட்டன. இது ஏதோ
டிஸ்கவரி சேனல் காமென்ட்ரி கிடையாது. நம்ம நித்தியின் பிடதி மடத்தில்
நிலைமை. நித்தியானந்தா கழுத்துவரை சிக்கலில் உள்ளார் என்பது இப்போது
மடத்தில் உள்ளவர்களுக்கும் புரியத் துவங்கியுள்ளது.கடந்த 3 தினங்களில், மடத்தில் இரண்டு தடவைகள் போலீஸ் ரெயிடு நடந்து விட்டது. அதைவிட, விசாரணை என்ற பெயரில் அடிக்கடி போலீஸ் வந்து செல்கிறது. இதையடுத்து, மடத்தில் தங்கியிருந்த உள்நாட்டவர்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டார்கள். அல்லது, வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கியுள்ள சிலர்தான் மடத்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பது என்ற முடிவில் உள்ளார்கள்.
இதில் பெரிய தமாஷ் என்னவென்றால், மடத்தில் இருந்து வெளியேறும் ஆட்களை கர்நாடக போலீஸ் தரோவாக சோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கிறது. மடத்தில் உள்ள ஆவணங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை சந்தடி சாக்கில் வெளியே கொண்டு போகும் திட்டமோ என்ற சந்தேகமே இதற்கு காரணம்.
வெளியேறும் சிஷ்யர்களுக்கும், மடத்துக்கு வெளியே சூழ்நிலை எப்படி உள்ளது என்பது நன்றாகவே புரிந்திருக்கிறது. ஆன்மீக கெட்டப்பில் வெளியே தலைகாட்டினால், தர்ம அடி தப்பாமல் கிட்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். இதனால், தூய வெண்ணிற ஆடைகள், காவி டிரெஸ்கள் ஆகியவற்றில் இருந்து மாறி, மஃப்டியில்தான் வெளியேறுகிறார்கள்.
மடத்தில் சில தினங்களுக்குமுன் நடைபெற்ற சர்ச்சைக்குரிய செய்தியாளர் சந்திப்பில், மீடியாக்காரர்களை முறத்தால் அடித்து விரட்டிய பெண் சிஷ்யைகள், காவியைக் களைந்து சுடிதாரில் வெளியேறும் காட்சி, கண்கொள்ளாக் காட்சி என்றார், லோக்கல் மீடியா செய்தியாளர் ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக