ஜனாதிபதி’ பிரணாப் பிளான்: “சுண்டங்கா காபுலா? சுற்றிவர தனி பிளேனா?”
Viruvirupu
மேஜிக் நிபுணரின் தொப்பியில் இருந்து வரும் புறாவாக, பிரணாப்பை
எந்த நிமிடமும் காங்கிரஸ் கட்சி தூக்கிக் காட்டும் என்ற நிலை தலைநகரில்
உள்ளது. எல்லாமே, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புதான். இதை நீங்கள் படித்துக்
கொண்டிருக்கும் நிமிடத்தில்கூட அறிவிப்பு வெளியாகியிருக்கலாம்.
அதை எதிர்பார்த்தோ, என்னவோ, திட்டமிட்ட தமது வெளிநாட்டு பயணத்தை கேன்சல் செய்திருக்கிறார் பிரணாப். சோனியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிரணாப்பின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டது என்றும் ஒரு தகவல் டில்லி மீடியா சர்க்கிள்களில் அடிபடுகிறது.
பிரணாப்பின் பெயரை அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சி இன்னமும் கம்பர்டபிளாக இல்லை.
காரணம், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய அனைத்துக் கட்சிகளும் பிரணாப்பை ஏற்றுக் கொள்வதாக இன்னமும் உறுதியளிக்கவில்லை என்றே தெரிகிறது. தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளே வெளிப்படை ஆதரவை தெரிவித்துள்ளன.
கடந்த இரு தினங்களில் இரண்டு தடவைகள் சோனியா – பிரணாப் சந்திப்பு சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இரு தடவைகளும், வேறு முக்கியஸ்தர்கள் யாரும் இல்லாமல் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இந்தச் சந்திப்புகளை அடுத்து, வேட்பாளர் ரேஸில் பிரணாம் முந்துவதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் சூடம் அடித்து சத்தியம் செய்ய தயாராக இருக்கிறார்கள் பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள். அதை உறுதிப்படுத்தும் தகவலாக, பிரணாப் தமது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு டில்லியில் தங்கியிருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
காபுல் நகரில் நடைபெறுவுள்ள தெற்காசிய நாடுகளின் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நிதியமைச்சர் என்ற முறையில் பிரணாப் முகர்ஜியின் ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. “உள்நாட்டு பொருளாதார நெருக்கடிகள் மீது கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், நிதியமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்கிறது அமைச்சு நியூஸ் பிரீஃப் .
விடுங்க சாப். நிதியமைச்சராக வெளிநாடு செல்வதைவிட, ஜனாதிபதியாக சென்றால், கியாதி அதிகமாக இருக்கும்.. டீக் ஹை?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக