திங்கள், 18 ஜூன், 2012

அப்துல்கலாம் போட்டியிடவில்லை குடியரசுத் தலைவர் தேர்தலில்

 Kalam Not Contest குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மனசாட்சி இடம்கொடுக்கலை: அப்துல்கலாம் அறிவிப்பு

டெல்லி: நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்று முனனள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தமது மனசாட்சி இடம் கொடுக்க வில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கலாம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று கலாமிடம் 3 முறை தொலைபேசியில் பேசியிருந்தார். மமதா பானர்ஜியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். பாஜகவின் குல்கர்னி நேரில் சென்று கலாமை சந்தித்துப் பேசினார்.
இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து கலாமை ஆதரிக்காததே அவர் போட்டியிடாமல் இருக்கக் காரணம் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக