திங்கள், 18 ஜூன், 2012

BJP யில் பிளவு பிரணாபுக்கு மேனகா நேரில் சென்று அதரவு

பாஜகவில் பிளவு?: பிரணாப்புக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த மேனகா காந்தி!

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பாஜக இன்னும் முடிவை எடுக்காத நிலையில், பிரணாப் முகர்ஜி தான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த எம்பியான மேனகா காந்தி கூறியுள்ளார்.
யில் பிளவு பிரணாபுக்கு மேனகா நேரில் சென்று அதரவு 
மேலும் பிரணாப் முகர்ஜியை அவரது இல்லத்திலும் சந்தித்து மேனகா காந்தி வாழ்த்துத் தெரிவித்தார்.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் நாள்தோறும் புதிய புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்த பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கலாம் முற்றுப் புள்ளி வைத்த சில மணிநேரத்தில் அடுத்த திருப்பம் நடந்தேறி உள்ளது.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மேனகா, ஜனாதிபதி பதவிக்கு மிகச் சரியானவர் பிரணாப் முகர்ஜி தான். அவர் தான் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும். பிரணாப் முகர்ஜியை ஒருமனதாக அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருந்த அவர், அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவரை இன்று நேரிலும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதன்மூலம் ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் பாஜகவிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. தனது கட்சி இன்னும் ஆலோசனைகளிலேயே இருக்கும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரித்துள்ளார் மேனகா காந்தி.
இது பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. டெல்லியில் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக