வியாழன், 7 ஜூன், 2012

ஹீரோ பற்றி கவலையில்லை - அஞ்சலி!

தமிழில் இரண்டு, தெலுங்கில் ஒன்று என பிஸியான நடிகையாக இருக்கிறார் அஞ்சலி. சமீபத்தில் அஞ்சலி அளித்த பேட்டியில் “ சிறு வயதில் எனக்கு பிடித்த ஹீரோ அமிதாப் பச்சன் தான். இப்போது நான் சந்திக்க விரும்பும் நடிகர்கள் ரஜினி சாரும், அமிதாப் சாரும் தான். 
நடிகைகளில் அனைவரையும் எனக்கு பிடிக்கும். ஆனால் ஸ்ரீதேவி போல் புகழ் பெற வேண்டுமென்பதே என் குறிக்கோள்(இந்தி படத்தில் நடிக்க ஆசை என்பதை வெளிப்படையாக சொல்லலாமே).  நடிகைகளில் அமலாபால், ஜனனி ஐயர் ஆகியோர் தான் எனக்கு நெருங்கிய தோழிகள். 
மணிரத்னம், ராம் கோபால் வர்மா ஆகியோரின் படத்தில் நடிக்க ஆசை. படத்தின் கதை தான் ரொம்ப ரொம்ப முக்கியம் ஹீரோ அல்ல. ஹீரோ புதுமுகமாக இருந்தாலும் பரவாயில்லை” என்று கூறியிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக