ஞாயிறு, 3 ஜூன், 2012

ரோஜா: இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது

Roja Confident Ysr Congress Victory By Polls
ஹைதராபாத்: ஆந்திராவில் ஜெகனுக்கு எதிராக சிபிஐயை தூண்டிவிடும் காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது என்று நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரதிநிதியுமான ரோஜா கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஹைதராபாத் சஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் வந்துள்ள நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சோனியா காந்தி தனது அரசியல் எதிரிகளை சிபிஐ மூலம் பழி தீர்த்து வருகிறார். எங்கள் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியதால் கடும் ஆத்திரத்தில் உள்ளார். முன்பெல்லாம் சிபிஐ மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிபிஐ சோனியா காந்தியின் கைப்பாவையாக செயல்படுகிறது.

ஜெகனை பழிவாங்குவதற்காக தனது கைப்பாவையான சிபிஐ போலீசார் மூலம் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இடைத்தேர்தலில் ஜெகன் பிரச்சாரம் செய்தால் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று கருதி அவர் கைது செய்துள்ளார். சோனியா காந்தியின் பழிவாங்கும் போக்கை ஆந்திர மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இந்த தேர்தலில் அவர்கள் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவார்கள். நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. 18 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு டெபாசிட் கிடைக்காது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக