தந்தை பெரியார் நினைவிடத்தில் கலைஞர் மலர் வளையம் வைத்து மரியாதை
கலைஞரை தமிழர் தலைவர் வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்
கலைஞரை தமிழர் தலைவர் வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்
தி.மு.க.
தலைவர் கலைஞர் தமது 89ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2012) தந்தை பெரியார்
நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தமிழர்
தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்,
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
சென்னை, ஜூன் 3- தி.மு.க. தலைவர் கலை ஞர்
அவர்களின் 89ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2012) தந்தை பெரியார் நினை
விடத்திற்கு வருகை தந்த கலைஞர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரி யாதை
செய்தார். கலை ஞரை தமிழர் தலைவர் வரவேற்று சால்வை அணிவித்து திராவிடர்
இயக்க நூல்களை வழங் கியும், இனிப்பை வழங் கியும் சிறப்பித்தார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 89ஆவது
பிறந்த நாளான இன்று (3.6.2012) காலை 7.30 மணியள வில், கலைஞர் அவர்கள் அண்ணா
நினைவிடத் திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதைச் செய்தார்.
கலைஞருக்கு பெரியார் திடலில் சிறப்பான வரவேற்பு
பின்னர் 7.45 மணி யளவில் சென்னை வேப்
பேரியில் உள்ள பெரி யார் திடலில் தந்தை பெரியார் நினைவிடத் திற்கு கலைஞர்
அவர்கள் வருகை தந்தார். கலைஞ ருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
அவர்கள் கழகத் தோழர் கள் புடைசூழ சிறப் பான வரவேற்பு அளித்து தந்தை
பெரியார் நினை விடத்திற்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத் தில்
கலைஞர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அப்போது திராவிடர்
கழகத் தலைவர் கி.வீர மணி, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.
அன்பழகன், பொரு ளாளர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பழனி மாணிக்கம்,
து.நெப்போலியன், எஸ். ஜெகத்ரட்சகன், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர்
டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் கள் ஆற்காடு நா. வீரா சாமி, துரைமுருகன்,
பொன்முடி, ஏ.வ. வேலு, வீரபாண்டி எஸ். ஆறு முகம் மற்றும் டி.ஆர்.பி. ராஜா,
பரிதி இளம்வழுதி மாவட்டச் செயலாளர் கள் ஜெ. அன்பழகன், ஆர்.டி.சேகர் ஆகியோர்
உடன் இருந்தனர்.
கலைஞருக்கு பொன்னாடை புத்தகங்கள் இனிப்பு வழங்கல்
தந்தை பெரியார் நினைவிடத்தில் கலைஞர்
அவர்கள் மலர் வளையம் வைத்துவிட்டு வந்த பின்னர், நினைவிட நுழைவாயிலில்
தமிழர் தலைவர் கலைஞருக்கு பொன்னாடை அணி வித்து திராவிடர் இயக்க நூல்களை,
வழங்கி இனிப்பை வழங்கினார். தமிழர் தலைவர் வழங் கிய இனிப்பை பெற்றுக் கொண்ட
கலைஞர் தமிழர் தலைவருக்கு இனிப்பை வாயில் ஊட்டி பிறந்த நாள் மகிழ்ச்சியை
பரிமாறிக் கொண்டனர். கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச்
செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலைஞருக்கு இயக்க நூல்களை
வழங்கினர். பின்னர் தமிழர் தலை வரிடம் விடைபெற்றுக் கொண்டு கலைஞர் அவர்கள்
மகிழ்ச்சியுடன் சென்றார்.
இந்நிகழ்வில் திரா விடர் கழக தலைமை
நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், வழக்கறி ஞர் த. வீரசேகரன், சென்னை மண்டல
திரா விடர் கழகச் செயலாளர் நெய்வேலி வெ. ஞான சேகரன், தலைமை செயற்குழு
உறுப்பினர் கள் பார்வதி, திருமகள், மற்றும் மனோரஞ்சிதம், வெற்றி செல்வி,
பசும்பொன், மீனாட்சி, தனலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்
திருவள் ளுவன், பொன்னேரி பன்னீர்செல்வம், தங்க மணி, அரங்க. ராமச்சந் திரன்,
முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ஜெகதீசன், முனைவர் மங்களமுருகேசன்,
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு,
சிறீவில்லிப்புத்தூர் அமுதன், சுப. சீதா ராமன், மாலைராஜா, கே.பி.
இராமலிங்கம் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த இன்னாள் முன் னாள் நாடாளுமன்ற,
சட்டமன்ற உறுப்பினர் கள், கழக பொறுப் பாளர்கள் தோழியர்கள் திரளாக வந்து
கலைஞ ருக்கு வாழ்த்து தெரி வித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக