வெள்ளி, 22 ஜூன், 2012

வெள்ளப்பெருக்கிலும் வரண்டது காவிரி அதிச்சி மேல் அதிர்ச்சி

மேட்டூர்: வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலக் கட்டத்தில், நடப்பாண்டு, முதன்முறையாக, மேட்டூர் அணை நீர்வரத்து, பூஜ்யம் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; 93.470 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. காவிரி மற்றும் துணையாறுகள் நீர்பரப்பு பகுதியில், ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தென்மேற்கு பருவமழை காலத்தில், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்.
கடும் வறட்சி: நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை தாமதமானதால், காவிரி நீர்பிடிப்பு பகுதியில், கடும் வறட்சி நீடிக்கிறது. காவிரி மட்டுமின்றி, தமிழக எல்லைக்குள் காவிரியில் கலக்கும் பாலாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகாவதியாறு போன்றவையும் வறண்டு விட்டது. கடும் வறட்சி காரணமாக, கடந்த 1ம் தேதி, வினாடிக்கு, 2,118 கன அடியாக இருந்த நீர்வரத்து, ஜூன் 13ல், 1,059 கன அடியாகவும்; நேற்று முன்தினம், 688 கன அடியாகவும் சரிந்தது. காவிரியாறு மேலும் வறண்டதால், நேற்று காலை, வினாடிக்கு 458 கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு, 220 கன அடியாக சரிந்தது. மாலை 4 மணிக்கு, 375 கன அடி நீர் வந்தது.

sakthi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
அம்மா ஆட்சி காலம் வந்தாலே இப்படி தான் நடக்குது
விவசாயிகள் அதிர்ச்சி: மேட்டூர் அணை நீர்மட்டம், 78.490 அடியாகவும், நீர் இருப்பு 40.490 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. ஜூன் மாதம், அணை நீர்மட்டம் 78 அடியாக இருக்கும்போது, 220 கன அடி நீர் ஆவியாகி விடும். இதனால், அணைக்கு, நேற்று 220 கன அடி நீர் வந்த நிலையில், 220 கன அடி நீர் ஆவியானதால், நீர்வரத்து, "பூஜ்யம்' என்றே கணக்கிடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்வரத்து, 2008 ஜூன் 21ல், 1,170 கன அடியாகவும்; 2009 ஜூன் 21ல், 951 கன அடியாகவும்; 2010 ஜூன் 21ல், 1,261 கன அடியாகவும்; 2011 ஜூன் 21ல், 1,933 கன அடியாகவும் இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பாண்டில் வரலாறு காணாத அளவுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது, பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், விவசாயிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பருவமழை எப்போது? தென்மேற்கு பருவ மழை, கடந்தாண்டு ஜூன் முதல் தேதியிலேயே கொட்டி தீர்த்தது. தற்போது மூன்று வாரங்களாகியும், எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. சில நேரங்களில், மழை தாமதமாக துவங்கும் போது, அக்டோபர் வரை நீடிக்கும். தற்போது அப்படி தொடருமா எனத் தெரியவில்லை.

நீர்மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுமா? தமிழகத்தில் அனல், அணு, காற்றாலை மின் நிலையங்கள் அதிகளவில் வந்த நிலையில், நீலகிரியிலுள்ள 12 நீர் மின் நிலையங்களை, "பேக்கப்' மின் நிலையங்களாக, மின் வாரியம் பயன்படுத்தி வருகிறது. அனல் மின் நிலையங்களில் பழுது ஏற்படும் போது அல்லது "பீக் அவர்ஸ்' நேரங்களில், மாலை 6 மணி முதல், இரவு 11 மணி வரை, மின் நிலையங்கள் இயக்கப்பட்டு, மின் தட்டுப்பாடு சரி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள, அனைத்து மின் நிலையங்களையும், 24 மணி நேரமும் தடையின்றி இயக்கினால், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை ஓரளவுக்கு சரி செய்ய முடியும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யாத நிலையில், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அனைத்து அணைகளிலும், தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. இருப்பில் உள்ள தண்ணீரும், சில நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்திக்கு பயன்படும் என்பதால், மின் வாரிய வட்டாரத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக