செவ்வாய், 26 ஜூன், 2012

100 Seat Volvo வோல்வோ பேருந்து பெங்களுருவில்

100 பேர் செல்லும் வசதி கொண்ட வால்வோ பஸ்: பெங்களூரில் அறிமுகம்

ஒரே நேரத்தில் 100 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட வால்வோவின் மல்டி ஆக்ஸில் சிட்டி பஸ் பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர். அசோக் இந்த புதிய பஸ்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாட்டின் முக்கிய பெருநகரங்களின் போக்குவரத்தில் வால்வோ சிட்டி பஸ்கள் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகின்றன. அந்த வகையில், 14.5 மீட்டர் நீளம் கொண்ட மல்டி ஆக்ஸில் சிட்டி பஸ்களை வால்வோ நிறுவனம் தயாரித்துள்ளது.


நாட்டிலேயே முதன்முறையாக பெங்களூர் மாநகரில் இந்த புதிய மல்டி ஆக்ஸில் சிட்டி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முற்றிலும் குளிர்சாதன வசதிகொண்ட இந்த புதிய பஸ்சில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை பயணம் செய்யலாம்.

தாழ்தள வசதிகொண்ட இந்த புதிய மல்டி ஆக்ஸில் சிட்டி பஸ்கள் பெங்களூரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த புதிய பஸ்கள் நிச்சயம் பெங்களூர் மாநகர போக்குவரத்தில் முக்கிய பங்களிப்பை கொடுக்கும் என பஸ் போக்குவரத்தை துவங்கி வைத்த அமைச்சர் அசோக் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக