இன்றைய உலகில் இன்டர்நெட் என்றாலே எல்லோரின் மனங்களிலும் முதலில் வருவது கூகுளின் சேவையாகும். கூகுளின் தேடுதல் கருவி மூலம் தினமும் ஏராளமான தகவல்களைப் பெறமுடிகிறது. அதுபோல் இந்த கூகுளுக்குள் தினமும் ஏராளமான வெப்சைட்டுகளும் வருகின்றன. அந்த வெப்சைட்டுகளில் பயனுள்ளவையும் உண்டு. அதே நேரத்தில் விரும்பத்தகாத மற்றும் சர்ச்சைக்குரிய வெப்சைட்டுகளும் உண்டு. இவற்றை கூகுள் எப்போதுமே ஆராய்ந்து வருகிறது. மேலும் தேவையில்லாத வெப்சைட்டுகளைக் களைவதில் கூகுள் முழு முனைப்புடனும் இருக்கிறது.
அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 9,500 தேவையில்லாத புதிய வெப்சைட்டுகளைக் கண்டுபிடிப்பதாக தனது ஆன்டி-மால்வேர் இனிசியேட்டிவில் கூகுள் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் இணையதளத்தை பயன்படுத்துவோர் இந்த வெப்சைட்டுகளைப் பற்றி கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையும் செய்கிறது.
உலக அளவில் 600 மில்லியனுக்கும் அதிகமானோர் க்ரோ்ம, பயர்பாக்ஸ், சபாரி போன்ற பல ப்ராவ்சர்கள் மூலம் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று கூகுள் கூறுகிறது. அவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் போது ஏதாவது தேவையில்லாத வெப்சைட்டுக்குள் நுழைந்தால் உடனே திரையில் எச்சரிக்கை வாக்கியங்களை வெளியிடுவதாக கூகுள் கூறுகிறது. அதன் மூலம் பயனாளர்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று கூகுள் நம்புகிறது.
அதிலும் குறிப்பாக இ-காமர்ஸ் வெப்சைட்டுகள் தேவையில்லாத சிக்கல்களுக்குள் மக்களை மாட்டிவிடுகிறது. அதன் மூலம் ஏராளமான சைபர் குற்றங்களும் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றைத் தவிர்க்க கண்ணும் கருத்துமாக இருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக