நியூயார்க்: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா மீண்டும் போட்டியிடுவார்.
தங்களது திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்பது அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோரிக்கை. ஆனால் ஒபாமா இதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். எதிர்க்கட்சி வேட்பாளரான மிட்ரோம்னியும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
தற்போதைய தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கூட இதேக் கருத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக திடீரென ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி;
என்னைப் பொறுத்தவரையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள முடியும். திருமணம் என்பது சமூகம், மதம் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த விஷயமாக இருப்பினும், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளும் இதில் அடங்கி இருக்கிறது.
எனது குழந்தைகள் மலியா, சாஷாவின் பெற்றோர்களில் சிலர் ஒரே பாலின ஜோடிகள்தான்.
எனது மனைவிக்கு நல்ல கணவனாகவும், குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருப்பதால், சிறந்த அதிபராக திகழ்ந்து வருகிறேன். மீண்டும் அதிபராக தேர்ந்து எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக