மதுரை: நடிகை ரஞ்சிதா என்னுடன் இல்லை. இந்த விவகாரத்தில்
ஜெயேந்திரர் தலையிடக் கூடாது. அவருக்கு 10 நாள் கெடு விதிக்கிறேன். அவர்
தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என்று நித்தியானந்தா கூறியுள்ளா. தற்போது
மதுரை ஆதீன மட வளாகத்தி்ல நித்தியானந்தா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் காஞ்சி மடத்தை மதிக்கிறேன். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் காஞ்சி பெரியவர் தவறுதலாக கூறி இருக்கிறார். நான் நடிகை ரஞ்சிதாவை எங்கு சென்றாலும் அழைத்து செல்வதாக கூறி இருக்கிறார். ரஞ்சிதா தற்போது என்னுடன் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருகிறார் என்று கூறுவது தவறு. இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து விளக்க தயாராக இருக்கிறேன்.
மதுரை ஆதீனமாக நான் பட்டம் சூடிய விசயத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட யாரும் தலையிட வேண்டாம். அவர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களில் திரும்பபெற வேண்டும். என்னைப் புரிந்து கொண்டவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள், காசு கொடுத்து ஆதரவாளர்களைத் திரட்டும் அவசியம் எனக்கில்லை. இன்று என்னை எதிர்ப்பவர்கள் நாளையே என்னை ஆதரிப்பார்கள் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக