வியாழன், 10 மே, 2012

யுனெஸ்கோ ஆலோசகராக ஒரு தமிழர்,திமுக ஜின்னா

ஐ.நா.வின் யுனெஸ்கோ (மனித உரிமைகள்-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தமிழக வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா(வயது 34). தமிழர்களின் பிரச்சனைகளையும், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளையும் ஐநா மனித உரிமையின் கவனத்துக்கு கொண்டு செல்ல, ஜின்னாவின் நியமனம் உதவியாக இருக்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.அசன் முகமது ஜின்னா! தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர்.  திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நிர்வாக இயக்குநர். முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அரசியல் பிரமுகர். அவருக்குக் கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பு, தமிழர் நலனுக்குத் துணையாக அமையும்.
ஜின்னா அமைதியாக அரசியலில் ஈடுபடுபவர், ஆர்ப்பாட்டம் செய்யாதவர்.  விளம்பரம் செய்து கொள்ளாதவர்.  திமுக  தலைமை அவருக்கான விளம்பரத்தை சட்டமன்ற தேர்தலின் போது இயல்பாய் வழங்கியது. அவர் அதற்கு முன்பு பத்திரிக்கைகளில் பிரபலமடையவில்லையே தவிர, கட்சிக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் புதியவரல்ல.

 ஜின்னாவின் குடும்பம் பாரம்பரியமான தி.மு.கழக குடும்பம். அவரது தந்தை அசன் முகமது,   முரசொலி நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர். கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றியவர். ஒருங்கினைந்த நாகை, திருவாரூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகச் செயலாற்றியவர்.தந்தையை போலவே, கழக பற்றுகொண்ட ஜின்னா, திருவாரூரில் வார்டு செயலாளராகவும், வார்டு பிரதிநிதியாகவும் அடிப்படைப் பொறுப்புகளை வகித்தவர்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் தி.மு.க மாணவர் அணி செயலாளர், மத்திய சென்னை தி.மு.க வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர், தி.மு.க. மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் எனப் படிப்படியாக ஒவ்வொரு பொறுப்பையும் வகித்து, அதன்பின் மு.க.ஸ்டாலினால் இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார்.

கடந்த 2004ம் ஆண்டு இவர் இளம் அரசியல் தலைவர் என்று கவுரவிக்கப்பட்டிருக்கிறார் ஜின்னா . மாணவி சரிஹாசா ஈவ்டீசிங் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தவர் ஜின்னா என்பது குறிப்பிடத்தக்கது.

ஜின்னாவின் நியமன தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக