மும்பை: மும்பையில் நட்சத்திர சொகுசு ஹோட்டல் ஒன்றில் நடந்த போதை
பார்ட்டியில் பங்கேற்ற வெளிநாட்டவர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை மருந்து உள்ளிட்டவை பறிமுதல்
செய்யப்பட்டது.
மும்பை நகரின் முக்கிய பகுதியில் ஜூகூ என்ற ஏரியாவில் ஓக்வுட் என்ற நட்சத்திர சொகுசு ஹோட்டல் ஒன்று உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இங்கு வெளிநாட்டவர்கள் மற்றும் சில ஆண்கள், பெண்கள் ஆகியோர் போதை மருந்துடன் பார்ட்டி நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மும்பை கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் நங்ரேபாட்டீல் தலைமையில் உயர் போலீசார் அதிகாரிகள் சிலர் இரவு 8.45 மணியளவில் ஹோட்டலுக்குள் புகுந்து அதிரடியாக ரெய்டு நடத்தினர். போலீசார் சுற்றிவளைக்கப்பட்டதை அறிந்த சிலர் போதையில் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர்.
எனினும் பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் வெளிநாட்டவர்கள் எனவும், 58 ஆண்கள், 38 பெண்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
போதை பார்ட்டி நடந்த இடத்தில் தலா 103 கிராம் எடை கொண்ட கோகைன் என்ற போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆய்விற்காக அனுப்பி வைத்தன்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் விஸ்வாஸ் நங்ரேபாட்டீல் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25-ல் இருந்து 35 வயதிற்குட்பட்டவர்கள், இவர்களை உடனடியாக பந்தரா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், அந்தேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். இதில் யார் யார் போதை மருந்தினை உட்கொண்டிருந்தனர் என்பது குறித்து டாக்டர் அளிக்கும் அறிக்கையின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்படும்.
ஐ.பி.எல்.வீரர்கள் பங்கேற்றனரா? போதைப் பார்ட்டியில் ஐ.பி.எல். வீரர்கள் இருவர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை போலீசார் உறுதி செய்யவில்லை. சம்பந்தப்பட்ட ஐ.பி.எல். வீரர்கள் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக