ஞாயிறு, 20 மே, 2012

ஹோமோசெக்ஸ் கணவர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த வரதநல்லூர் தாளகுளத்தைச் சேர்ந்த முனியப்பன் மகள் ஸ்ரீசுதா(28). இவருக்கும், சின்னப்பெரிச்சிபாளையத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் விஸ்வநாதன்(30) என்பவருக்கும் கடந்த 10.7.2011ல் பவானியில் திருமணம் நடந்தது. விஸ்வநாதன் அமெரிக்காவில் வேலை செய்கிறார்.இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீசுதா அளித்த புகாரில், ’’திருமணத்தின்போது 57 பவுன் நகை, ரூ.7.5 லட்சத்தை பெற்றோர் கொடுத்தனர். திருமணத்துக்கு ரூ.8 லட்சம் செலவு செய்யப்பட்டது. திருமணம் முடிந்து 20 நாள் கழித்து இருவரும் அமெரிக்கா சென்றோம். அங்கு என்னுடன் தாம்பத்ய உறவை கணவர் புறக்கணித்தார்.
அவரது அலுவலகத்தில் பணிபுரியும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சக ஊழியருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது பின்னர் தெரியவந்தது. இது குறித்து, கேட்டபோது என்னை அடித்து காயப்படுத் தியதோடு, அப்படித்தான் வாழ்வேன் எனவும் தெரிவித்தார். எனது பெற்றோரிடம் ரூ.15 லட்சம் வரதட்சணையாகக் கொடுக்க வேண்டும் என கேட்டு அடித்து துன்புறுத்தினார். விஸ்வநாதனின் கொடுமை தாங்காமல் கடந்த ஏப்ரலில் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊரான தாளகுளம் திரும்பிவிட்டேன். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் விஸ்வநாதன், மாமியார் அன்னபூரணி(52), மாமனார் செல்லமுத்து(57), உறவினர் சின்னவேலு(48), இவரது மனைவி தனபாக்கியம்(42) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியிருந்தார் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக