பறவைபோல
பறந்து திரிவதில் பலருக்கும் விருப்பம் உண்டு. ஒரு முன்னாள் போர் விமான
பைலட், ரியோ டி ஜெனீரோ (பிரேசில்) வானில் அதை நிறைவேற்றியுள்ளார்.
“ஜெட்மேன்” என்று அழைக்கப்படும் வீஸ் ரொஸி, ரியோ டி ஜெனீரோ நகருக்கு அருகிலுள்ள போகோவார்டோ மலைப்பகுதியில் இருந்து பறக்கத் துவங்கி, உலகப் புகழ்பெற்ற ‘Christ the Redeemer’ சிலைக்கு மேலால் பறந்து, கோபகபானா கடற்கரையில் தரையிறங்கியுள்ளார்.
சிறகுகள் உடைய மினி ஜெட்பேக் ஒன்றை இதற்காக தயாரித்து, உடலில்
பொருத்தியபடி அவர் பறந்த நேரம், 11 நிமிடங்கள். ஹெலிகாப்டர் ஒன்றின் பறந்த
ரொஸி, அதிலிருந்து குதித்தபோது, தனது உடலில் இருந்த ஜெட்பேக் எந்திரத்தை
இயக்கி, பறந்திருக்கிறார்.
ஜெட்பேக் சக்தியில் பறந்த உலகின் முதலாவது நபர் இவர்தான். சுவிட்சலாந்து நாட்டு பிரஜையான ரொஸி, சுவிஸ் விமானப்படையில் போர் விமானங்களைச் செலுத்தும் விமானியாகப் பணிபுரிந்தவர். அதன்பின், சுவிஸ் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தில் கமர்ஷல் பைலட்டாகி, பயணிகள் விமானங்களை செலுத்தியவர்.
ஐரோப்பிய நகரங்களின் மேல் இப்படியான பறத்தல் முயற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால், பிரேசில்வரை சென்று அங்கு பறந்து காட்டியிருக்கிறார். “ஐரோப்பிய நகரங்களின் மேலாக பறப்பதற்கு இனி அச்சப்படாமல் அனுமதி கொடுப்பார்கள்” என்கிறார் ரொஸி.
“ஜெட்மேன்” என்று அழைக்கப்படும் வீஸ் ரொஸி, ரியோ டி ஜெனீரோ நகருக்கு அருகிலுள்ள போகோவார்டோ மலைப்பகுதியில் இருந்து பறக்கத் துவங்கி, உலகப் புகழ்பெற்ற ‘Christ the Redeemer’ சிலைக்கு மேலால் பறந்து, கோபகபானா கடற்கரையில் தரையிறங்கியுள்ளார்.
ஜெட்பேக் சக்தியில் பறந்த உலகின் முதலாவது நபர் இவர்தான். சுவிட்சலாந்து நாட்டு பிரஜையான ரொஸி, சுவிஸ் விமானப்படையில் போர் விமானங்களைச் செலுத்தும் விமானியாகப் பணிபுரிந்தவர். அதன்பின், சுவிஸ் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தில் கமர்ஷல் பைலட்டாகி, பயணிகள் விமானங்களை செலுத்தியவர்.
ஐரோப்பிய நகரங்களின் மேல் இப்படியான பறத்தல் முயற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால், பிரேசில்வரை சென்று அங்கு பறந்து காட்டியிருக்கிறார். “ஐரோப்பிய நகரங்களின் மேலாக பறப்பதற்கு இனி அச்சப்படாமல் அனுமதி கொடுப்பார்கள்” என்கிறார் ரொஸி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக