புதுடில்லி: பெண்களுக்கு விவாகரத்து கேட்ட மாத்திரத்தில் கொடுத்து
விடுவதால் எந்தவொரு தவறும் இல்லை என்றும், இதன் மூலம் பெண்கள்
உணர்வுப்பூர்வமாக பாதிப்பதில் இருந்து விடுதலை பெற்றுத்தருவதுடன்,
இவர்களின் இன்னல்கள் விரைந்து தீர்ந்து போகும் என்றும் பார்லி.,யில்
தமிழகத்தை சேர்ந்த தி.மு.க,. எம்.பி.,கனிமொழி வாதிட்டார்.
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நடிகையும் எம்.பி.,யுமான ஜெயாபச்சன்; விவகாரத்து என்பது
உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கும் முடிவுஇதனால். கால அவகாசம் குறைக்காமல்
இருந்தால் இருவரும் மீண்டும் இணைவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்றார்.நடப்பு பார்லி,. கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில் ஒன்றான திருமண சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை பொறுத்தவரை கணவன், மனைவி இருவரும் ஒருமித்த கருத்துடனோ பெண்கள் தனியாகவோ விவகாரத்து கோரும் பட்சத்தில் இதில் தாமதம் செய்யக்கூடாது என்ற ஒரு சரத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ., சமாஜ்வாடி, திரிணாமுல், அகாலிதள் உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு சட்டம் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் திருமண பந்தம் அற்றுப்போவது அதிகரித்து விடும் என கவலைப்படுகின்றனர்.
ஆனால் தி.மு.க.,தரப்பில் ராஜ்யசபாவில் வாதித்த கனிமொழி எம்.பி., பேசுகையில்; ஒரு பெண் எவ்வாறு நடத்தப்படுகிறார், அவருடைய சுதந்திரம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது, மற்றும் அவள் அடையும் உணர்வுப்பூர்வ வேதனையையும் நாம் நினைத்து பார்ப்பதாக தெரியவில்லை. ஆண்களுக்கென வழங்கப்பட்டுள்ள உரிமை பெண்களுக்கும் இருக்கிறதா என்பதை கேள்வியாக எழுப்பி பாருங்கள். திருமண பந்தம் என்ற பெயரில் கணவன் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறார். அதே உறவில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என நினைக்கும் போது ஏன் சமூகம் மறுக்க வேண்டும்.
கணவரை பிரிய வேண்டும் என நினைக்கும் போது அதில் தாமதப்படுத்த என்ன இருக்கிறது. மேலும் அவர்களது ஜீவனாம்சம், சொத்தில் பங்கு என்பதிலும் முழு அக்கறை வரவேண்டும் . திருமணத்தை பெண்களின் சரணாலயமாக நினைப்பதை தவிர்க்க வேண்டும். திருமண உறவு தொடர்வதில் சிரமம் எழும் போது இதனை முறித்து கொள்வதில் அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்றார். பெண்களுக்கு நன்மை தரும் இந்த சட்டத்தை நான் மனதார வரவேற்கிறேன்.இவ்வாறு கனிமொழி பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக