வியாழன், 10 மே, 2012

கல்யாணத்தை' Vijay TVக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி!

Sneha Prasanna Sells Wedding Telecast Rights
கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும்.
தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும்.
பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை வைத்து இவர்கள் சம்பாதிக்கும்போது, அதில் கணிசமான பங்கை நமக்குக் கொடுத்தால் என்ன?' என்ற எண்ணத்தோடு சினேகாவும் பிரசன்னாவும் ரேட் பேச, டிவி நிறுவனமும் பெரும் தொகை தர சம்மதித்துவிட்டதாம்.
மொய் வருதோ இல்லையோ, திருமண வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பெரும் தொகை கல்யாண வீடியோவுக்கு விலையாகக் கிடைத்திருப்பதில் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் செம சந்தோஷமாம்.

போகிற போக்கைப் பார்த்தால் வரும் நாட்களில் நடிகர் நடிகைகள் வீட்டு, காது குத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளைகாப்புகள் என எல்லா நிகழ்வுகளின் வீடியோக்களுமே விற்பனைக்கு வரும் போலிருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக