சனி, 21 ஏப்ரல், 2012

சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற மாஜி ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை!

Rramaraj and Dilshan
 
சென்னை: சென்னையில் பாதாம் கொட்டையைப் பறிக்க முயன்ற சிறுவன் தில்ஷன் மீது கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்த வழக்கில் கைதான முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
சென்னை தீவுத் திடல் பகுதியில் உள்ள ராணுவக் குடியிருப்புக்கு அருகே உள்ள பகுதியில் வசித்து வந்த சிறுவன் தில்ஷன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13 வயதான தில்ஷனும், இன்னும் சில சிறுவர்களும் ராணுவக் குடியிருப்புக்குள்ள உள்ள வாதாம் மரத்திலிருந்து பழங்களை பறிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் கந்தசாமி ராமராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தில்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான்இந்த நிலையில் கடும் சிரமத்திற்கு மத்தியில் ராமராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது சென்னை விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கோர்ட் இன்று ராமராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து ராமராஜின் வக்கீல் கூறுகையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்திற்குக் கூட செல்வோம் என்றார்.
  Read:  In English 
இந்த வழக்கை ஆரம்பத்தில் போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. குற்றவாளியான ராமராஜைக் கண்டுபிடிப்பதில் போலீஸார் ராணுவத் தரப்பிலிருந்து பெரும் சவால்களை சந்திக்க நேரிட்டது. ராமராஜை நெருங்கக் கூட முதலில் போலீஸாரால் முடியவில்லை. இருப்பினும் போலீஸார் தங்களது கெடுபிடியை விடாமல் தொடர்ந்ததால் வேறு வழியின்றி ராமராஜை போலீஸாரிடம் ஒப்படைத்தது ராணுவம்.

இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக