சனி, 21 ஏப்ரல், 2012

மம்தாபானர்ஜி:ஜனாதிபதி தேர்தலில் முலாயம் சிங் வேட்பாளருக்கு ஆதரவு



 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. முலாயம் சிங் நிறுத்தும் வேட்பாள ரை ஆதரிப்பதாக மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. இதை யடுத்து புதிய குடியரசுத் தலை வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் இப் போதே வரிந்து கட்டத் தொடங்கி உள்ளது. இந்தக் கட்சிக்கு உத்தர பிரதேச சட்டசபையில் 224 எம்.எல். ஏ.க்களும், நாடாளுமன்ற மக்கள வையில் 33 எம்.பி.க்களும் உள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி விவாதித்தனர். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை வேட்பாளராக தேர்வு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்த லிலும் அமோக வெற்றி பெற ஏற்ற வகையில் முஸ்லிம் வேட்பாளரை களம் இறக்குவது நல்லது என்பது சமாஜ்வாடிக்கட்சியின் கணக்கு. அப்துல் கலாமை நிறுத்தினால் பல கட்சிகளின் ஆதரவை திரட்டுவதும் எளிது என்பது முலாயம் சிங்கின் கணிப்பு.
முதலில் மேற்கு வங்காள மாநில முதல் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற முலாயம் சிங் விரும்புகிறார். ஏனெனில் திரிணாமுல் காங்கிரசுக்கு மேற்கு வங்காள சட்டசபையில் 186 உறுப்பினர்களும், நாடாளுமன்ற மக்களவையில் 20 உறுப்பினர்களும் உள்ளனர்.
மம்தாவின் ஆதரவைப் பெறு வதற்காக தனது தூதராக மேற்கு வங்காள மாநில மீன்வளத்துறை முன்னாள் அமைச்சரும், உத்தர பிரதேசத்தில் இருந்து டில்லி மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருமான கிரண்மாய் நந்தாவை மம்தா பானர்ஜியிடம் முலாயம் சிங் அனுப்பி வைத்தார். இவ்விரு தலைவர்களும் கடந்த 16ஆம் தேதி சந்தித்து 45 நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக கிரண்மாய் நந்தா கூறியதாவது:- குடியரசுத் தலைவர் தேர்தலில் முலாயம் சிங் நிறுத்துகிற வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று மம்தா பானர்ஜி உறுதி அளித்தார். அவர் சமாஜ்வாடிக்கட்சியுடன் இணைந்து செயல்பட தீர்மானித்து உள்ளார். வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் காங்கிரஸ் யாரை ஆதரிக்கும் என தெரியாத நிலையில், வேட்பாளரை நாங்கள் முடிவு செய்து விட முடியாது.
காங்கிரஸ் எங்கள் வேட்பாளரை ஆதரிக்கிறது என்றால் அது நல்லது. அல்லாத பட்சத்தில், நாங்கள் எங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுப்போம்.
- இவ்வாறு அவர் கூறினார்.
மம்தா பானர்ஜியைப் பொருத்த மட்டில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் பனிப்போர் நடத்தி வருகிறார்.  எனவே, காங்கிரஸ் தன்னிச் சையாக நிறுத்துகிற வேட்பாளரை அவர் ஆதரிக்க மாட்டார் என்பது தெளிவு. கடந்த 16ஆம் தேதி டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டி இருந்த முதல் அமைச்சர்கள் மாநாட்டை அவர் புறக்கணித்தது நினைவு கூரத்தக்கது.
இந்த நிலையில், அவர் சமாஜ் வாடிக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறார் என்றால் இவ்விரு கட்சிகளும்  குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு கட்சிகளில் ஆதரவு இன்றி மத்திய அரசும் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் இவ்விரு கட்சிகள் கூறும் வேட் பாளரை நிறுத்த வேண்டிய நிர்ப் பந்தம் காங்கிரசுக்கு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக