சனி, 21 ஏப்ரல், 2012

1000 திரையரங்குகளில் ரஜினியின் பாட்ஷா! Hindi version Basha

ரஜினி, நக்மா ஜோடியாக நடித்து 1995-ல் ரிலீசாகி வசூல் சாதனை படைத்த படம் ‘பாட்ஷா’. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இந்தப் படம் பெரும் வசூல் சாதனை புரிந்தது.
‘பாட்ஷா’ படத்தை தற்போது புதிய தொழில்நுட்பத்தில் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இதற்காக டிஜிட்டல் கலர் டெவலப்பிங் செய்து புதிய நெகட்டிவ் தயார் செய்துள்ளனர்.
அத்துடன் இசையமைப்பாளர் தேவா புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் இசையமைத்துள்ளார். ஸ்டீரியோபோனிக் 5.1 தொழில்நுட்பத்தில் இசை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியில் இப்படத்துக்கு ‘பாஷா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தி வசனத்தை கோபால்ராம் எழுதியுள்ளார். இந்திக்கான பாடல்களை ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உதித் நாராயணன், சித்ரா, கவிதாகிருஷ்ணமூர்த்தி, குமார் சானு, பூர்ணிமா ஆகியோர் பாடியுள்ளனர்.
பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் இப்படத்தை 1000 தியேட்டர்களில் வெளியிடுகிறார். இந்த வாரம் படத்தை ரஜினிக்கும் போட்டுக் காட்டுகிறார்கள்.

இதுகுறித்து பிரசாத் நம்மிடம் கூறுகையில், “இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களிடம் பேச வேண்டும். இந்தியில் வெளியிட காரணம், வட இந்திய ரசிகர்கள் இந்தப் படத்தை வெள்ளித் திரையில் பார்க்க ஆர்வமோடு இருப்பதுதான். குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றன,” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக