சனி, 21 ஏப்ரல், 2012

காணாமல் போன 5 மாணவிகள் ஆசிரியர், பெற்றோர் திட்டுவார்கள் என்பதால்

விருது நகர் : பள்ளி மாணவிகள் மீட்பு
விருதுநகரில் காணாமல் போன பள்ளி மாணவிகளை, இருக்கன்குடி அருகே போலீசார் மீட்டனர்.விருதுநகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தேர்வு பிற்பகலில் நடந்து வருகிறது.
 நேற்று முன்தினம் பள்ளி சென்ற 6 ம் வகுப்பு மாணவிகள் ஐந்து பேர் மாயமானர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர்கள் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தனர். இதனிடையே, இருக்கன்குடி முத்துச்சாமிபுரத்தில் இருந்த மாணவிகளை, நேற்று காலை போலீசார் மீட்டு, விருதுநகர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதன்பின், மாணவிகள் ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைக்க ப்பட்டனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""மாணவிகள் தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை. ஆசிரியர், பெற்றோர் திட்டுவார்கள் என நினைத்து, இருக்கன்குடி முத்துச்சாமிபுரத்தில் உள்ள ஒரு மாணவியின் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக