சனி, 21 ஏப்ரல், 2012

பாலிடெக்னிக் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை



ஆம்பூர் ஏ கஸ்பா சின்னகம்மார தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சந்துரு (வயது17), வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று பிற்பகல் கல்லூரியில் இருந்து வீடு திரும்பினார். மாலை 4.30 மணி வரை கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது தாயார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

அங்கு மாணவன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து மாணவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர்.   மாணவன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற் றினர் அதில் கூறியிருப்பதாவது:-

எனக்குள் இருப்பவன் தான் இதை செய்ய சொல்கிறான். இது ஒரு கொலை. நான் மீண்டும் வருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவர் நெற்றியில் மஞ்சள், குங்குமம் வைத்துள்ளார்.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக