சனி, 21 ஏப்ரல், 2012

'மே-1' பில்லா -2 முன்னோட்டம் ஒரு வாரத்திலேயே ஐந்து லட்சம் பார்வையாளர்

அஜித் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கிகொண்டிருக்கும் படம் பில்லா-2. இந்த படத்தின் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் ரிலீஸானது. ரிலீஸான ஒரு வாரத்திலேயே ஐந்து லட்சம் பார்வையாளர்களை தாண்டியதி. சில டெக்னிக்கல் கோளாறு காரணமாக அந்த முன்னோட்டத்தை எடுத்துவிட்டார்கள். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுனில் கெதர்பல் நேற்று தனது சமூகஇணையதளத்தில் “இன்று இரவு அல்லது நாளை முதல் பில்லா-3 படத்தின் டிரெய்லர் சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும். சிலபிரச்சினைகள் காரணமாக இணையதளத்தில் வெளியிடுவதில் தாமதமாக வெளியிடுகிறோம்” என்று கூறியுள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் “ நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பில்லா-2 படத்தின் இசை தல பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.இது போன்ற நிகழ்ச்சிகளில் தலை காண்பிப்பதில் தல விருப்பம் கொள்ளமாட்டார். இருந்தாலும் பொருத்திருந்து பார்ப்போம் என்பதே ரசிகர்களின் நிலை. எனவே மே-1 பில்லா-2 படத்தின் பாடல் ரிலீஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக