புதன், 21 மார்ச், 2012

WallStreet ஆக்கிரமிப்பு' போராட்டத்தின் ஆறாவது மாத நிறைவு: 15 பேர் கைது

நியூயார்க், மார்ச் 19- உலகின் கவனத்தையே தன் பக்கம் திருப்பிய, வால்ஸ்ட்ரீட் ஆக்கிர மிப்பு' போராட்டத்தின் ஆறாவது மாத நிறைவு நாள், நேற்று முன்தினம் நியூயார்க்கில் கொண்டா டப்பட்டது. ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர் களை, நியூயார்க் காவல் துறையினர் கைது செய் தனர்.
அமெரிக்க அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளில், செல்வாக்கு மிக்க தனியார் நிறுவனங் கள் தலையை நுழைத்து, தங்களுக்கேற்ப மாற்றிக் கொள்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தான். இதை உணர்ந்த அமெரிக்க நடுத்தர வர்க்க இளை ஞர் சமுதாயம், கடந் தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, அமெரிக்காவின் நிதி நிறுவனங்கள், பங் குச் சந்தைகள் செயல்ப டும் நியூயார்க் நகரில், வால்ஸ்ட்ரீட் ஆக்கிர மிப்பு' போராட்டத்தைத் துவக்கினர்.
இப்போராட்டம், ஓரிரு வாரங்களில் உல கம் முழுவதும் பரவியது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்ட மாக, இந்த சம்பவம் பார்க்கப்பட்டது. இதை யடுத்து, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், லண் டன், பாரீஸ், பெர்லின், சிட்னி உள்ளிட்ட உல கின் பிரபல நகரங்களில், இதுபோன்ற ஆக்கிர மிப்பு போராட்டங்கள் துவங்கின. நியூயார்க்கின் ஜுகோட்டி பூங்காவில் திரண்டிருந்த ஆர்ப் பாட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டப் பட்டனர். அவர்கள், நியூயார்க்கின் பல்வேறு இடங்களில், தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் ஆறாவது மாத நிறைவு நாளை, ஆர்ப்பாட்டம் துவக் கப்பட்ட ஜுகோட்டி பூங்காவில், ஆர்ப்பாட் டக்காரர்கள் கொண்டா டினர். தொடர்ந்து, அப் பூங்காவில் கூடாரம் போட்டுத் தங்கத் துவங் கினர். இதைப் பார்த்த காவல்துறையினர் கலவரம் அடைந்து, 15 பேர்களைக் கைது செய்து, மற்றவர்களை பூங்காவில் இருந்து விரட்டினர். தொடர்ந்து, பூங்காவை ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்தனர்.
எனினும், தங்கள் போராட்டம் தொடரும் என, ஆர்ப்பாட்டக்கா ரர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக