புதன், 28 மார்ச், 2012

Jeyalalitha:நானே ஒதுக்கிட்டேன்; உங்களுக்கு என்ன உறவு'

அக்கும்பலை நானே ஒதுக்கிட்டேன். உங்களுக்கு (எம்.எல்.ஏ., க்கள்) அவர்களிடம் என்ன உறவு இருக்கிறது. இதை எவ்வளவோ முறை சொல்லி விட்டேன். இனிமேல் நடவடிக்கை தான்' என, சமீபத்தில் கட்சி எம்.எல்.ஏ., களிடம் முதல்வர் ஜெயலலிதா காட்டமாகக் கூறியுள்ளார்.
சென்னையில் அ.தி.மு.க., கட்சி எம்.எல்.ஏ., க்கள் சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இருந்த ஒரு மாவட்டச் செயலர் மற்றும் எம்.எல்.ஏ., வை பார்த்து பேசிய முதல்வர், "அக்கும்பலை வேண்டாம் என நானே ஒதுக்கி விட்டேன். ஆனால், உங்களில் சிலர், இன்னமும் அக்கும்பலுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். இதை எத்தனையோ முறை உங்களிடம் சொல்லி விட்டேன். இனிமேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என காட்டமாகப் பேசினார்.

முதல்வரின் குற்றச்சாட்டில் தொடர்புடைய நிர்வாகிகள், முதல்வரிடம் பவ்யமாக, "அம்மா, அந்த கும்பல் விரட்டியடிப்பதற்கு முன்பு, கார்டனில் இருந்து உத்தரவுகள் பிறப்பித்தனர். அதனை, வேறு வழியின்றி செய்தோம். தற்போது அம்மாவே, அக்கும்பலுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என சொல்லி விட்டீர்கள். நாங்கள் அவர்கள் இருக்கும் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டோம்' என, கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக