புதன், 28 மார்ச், 2012

சங்கரன்கோவில் மீண்டும் மின்சார வெட்டு!


தினமும் 8 மணி நேர மின்சார வெட்டு. இதனால் கிராமப்புறங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. போதிய வருமானம் இல்லாமல் தொழில்களும், தொழிலாளர்களும் முடக்கப்பட்டனர்.தமிழகத்தில் மற்ற பகுதிகளைப் போன்று சங்கரன்கோவிலிலும் இதுதான் நிலைமை.

இப்பிரச்சனைகளுக்கிடையே நடக்கும் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு வாய்ப்பு குறைவு என்பன போன்ற தகவல்கள் உளவுத்துறை மற்றும் கட்சி பொறுப்பாளர்களிடமிருந்தும் அதிமுக தலைமைக்கு தகவல்கள் சென்றன.
இந்த சூழலில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள், மின்வெட்டை முன்வைத்து சூடு பறந்துகொண்டிருந்தன. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு கடந்த 14.03.2012 வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே ஆட்சியாளர்களால் சங்கரன்கோவிலுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணைக்கை நடந்து அதிமுகவும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் 26.03.2012 முதல் மீண்டும் நாள் ஒன்றுக்கு 6 மணி நேர மின்தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுகுறித்து நடுத்தர வர்க்கத்தின் வாக்காளர் ஒருவர் கூறும்போது, வாக்குகளைப் பெறுவதற்கு இதெல்லாம் ஒரு அரசியல் தந்திரம். தேர்தலில் வெற்றிப் பெற்றப் பிறகு மீண்டும் மின்சார வெட்டு கொண்டுவரப்படும் என்பது தெரிந்த விஷயம்தானே. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக