புதன், 28 மார்ச், 2012

கைதிகளுக்காக திரையிடப்பட்டது விஜய் படம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே மனிதநேயத்தை வளர்க்கும்;சிறையில் உள்ள கைதிகளுக்கு ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்து ரசித்த கைதிகள் இறுக்கம் தளர்ந்து  காணப்பட்டுள்ளனர்.அதன் பிறகு அவர்கள் பல விதமான விளையாட்டுகள் விளையாடி உள்ளனர். தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்த படம் போடப்பட்டதாம்.>நண்பன் படம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது போல் கைதிகளாலும் நன்முறையிலேயே  விரும்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக