ஞாயிறு, 11 மார்ச், 2012

தமிழ் இயக்குனர்களை தவிக்கவிடும் பூஜா

நடிகை பூஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பும் இயக்குனர்களை அவர் தவிக்க விடுகிறாராம்.
நடிகை பூஜா சிங்கள படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு கோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்த இயக்குனர் பாலாவின் எரியும் தணல் படத்தில் நடிக்கவிருக்கிறார். பாலாவின் நான் கடவுள் படம் பூஜாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவரைக் காணவில்லை. சிங்களத்திற்குப் போய் விட்டார்.
தற்போது பாலா படம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். பூஜா தமிழ்ப் படங்களில் நடித்து வந்தாலும், அவர் ஒரு இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தமிழில் நடிக்கும்போது பெங்களூரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கி நடிப்பார். தற்போது அவர் சிங்களப் படங்களில் பிசியாக உள்ளதால் இலங்கையில் உள்ள பாட்டி வீட்டில்தான் அதிக நாட்கள் இருக்கிறார். இடையில் காதல், கல்யாணம் என்றெல்லாம் பேச்சு வந்தது. இருப்பினும் அதை பூஜா மறுத்தார்.
தற்போதும் கூட பூஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பும் தமிழ் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் பூஜா இலங்கையில் இருப்பதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனராம். தமிழில் நல்ல பட வாய்ப்புக்கு காத்திருக்கும் பூஜாவோ இலங்கையில் இருப்பதால் பல நல்ல வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போகிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக