சனி, 18 பிப்ரவரி, 2012

பிரபுதேவாவின் பச்சையை அழிக்க நயன்தார கடும் முயற்சி

பிரபு தேவாவை முற்றிலுமாக பிரிந்து வந்துவிட்ட நயன்தாரா, தன்னிடமிருக்கும் அவரது நினைவுகளின் அடையாளங்களையும் அழித்துவிட விரும்புகிறாராம்.
அதன் விளைவு கையில் பச்சையாகக் குத்தியுள்ள பிரபு தேவாவின் பெயரை அழிக்க மருத்துவர்களை நாடியுள்ளார்.
வில்லு படம் முடிந்த உடனேயே இந்தப் பச்சையை குத்திக் கொண்டாராம் நயன். பிரபு தேவா மீதுள்ள காதலின் அடையாளமாக, எந்த நடிகையும் செய்யத் துணியாத இந்த செயலை நயன்தாரா செய்தார்.
ஆனால் பிரபு தேவாவோ, அடுத்த படம் எங்கேயும் காதலை இயக்கியபோது, அதன் ஹீரோயின் ஹன்ஸிகா மீது மோகமாகிவிட்டார் என்கிறார்கள்.

இப்படியொரு ஆளுக்காக என் உடம்பில் பச்சை குத்திக் கொண்டது எத்தனை கேவலமானது என நண்பர்களிடம் புலம்பும் நயன்தாரா, முதல் கட்டமாக இந்த பச்சையை அழிப்பது எப்படி என ஆலோசனை செய்துள்ளார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் முற்றாக அழித்துவிடலாம், கையும் அதே அழகுடன் இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதால், இப்போது ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு ஆயத்தமாகிறாராம்.
அஜீத்தின் புதிய படம், நாகார்ஜுனாவின் அடுத்த படங்கள் தொடங்குவதற்குள் இந்த பச்சை இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம்!
பிரபுதேவாவின் பச்சையை அழிக்க நயன்தார கடும் முயற்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக