ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

Free Free Free சங்கரன்கோவில் தொகுதியில்


மிழகத்தில் எங்குமே பார்க்க முடியாத காட்சிகளை மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்ற சங்கரன்கோவில் தொகுதியில் காண லாம்.
தேதி அறிவிப்புக்கு முன்னதாக, தொகுதியின் மூலை முடுக்குகளி லெல்லாம் தலைச் சுமையாக, சைக்கி ளில் கட்டிக் கொண்டு, டி.வி.எஸ். 50-களில்... ஆட்டோக்களில்... கார் களில்... அட, ஆம்புலன்ஸிலும்கூட அவைகள்’ தான். அவை என்றால் எவை? இடைத்தேர்தலுக்கான சன் மானமா? ம்ஹூம்.. அப்படிச் சொல்லக் கூடாது... மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் போன்ற அரசாங்கம் கொடுக்கின்ற இலவசப் பொருட்களா? அப்படியும் சொல்லக்கூடாது. பிறகு எப்படித்தான் சொல்வதாம்? அப்படிக் கேளுங்க. இவையெல்லாம் விலையில் லாப் பொருட்கள். விலை யில்லை என்றால் மதிப் பில்லை என்று கருதி விடக்கூடாது. ஆளும் கட்சிக்கு பெருவாரியான வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடிய மதிப்புமிக்க பொருட் கள்.’இப்படி நாம் சொல்லவில்லை. இரவு- பகல் பாராது இவைகளை வினியோகிக்கின்ற அதிகாரிகளே சொல்கிறார்கள்- ""விலையில்லாப் பொருட்கள் வினியோகத்தில் தமிழகத்தில் மற்ற 233 தொகுதி களில் இதுவரை காட்டாத அக்கறையையும் அங்கு தரவேண்டியவற்றை திருப்பி விட்டும் சங்கரன் கோவில் தொகுதியில் மட்டுமே நாங்கள் அக்கறை காட்டுகிறோமே? ஏன்? நாட்கள் குறைவாகத்தான் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள். மிகமிக அவசரம். "ரேசன்கார்டுதாரர் ஒரு வர்கூட விடுபட்டுவிடக்கூடாது' என்ற மேலிடத்தின் உத்தரவைத்தான் சிரமேற் கொண்டு செய்து வருகிறோம்'' என்கிறார்கள்.


அதிகாரிகள் சொல்வது நிஜம் தான். நாள் தவறாமல் கண்டெய்னர் களிலும், லாரிகளிலும் இந்த விலை யில்லாப் பொருட்கள் சங்கரன்கோவி லுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.


சங்கரன்கோவில் உழவர் சந்தை -ஒழுங்குமுறை விற் பனைக்கூடத்துக்கு முன்பாக ஏக பரபரப்பு.. நீண்ட கியூ.. ஆட்டோ ஸ்டாண்டே இடம் பெயர்ந்து விட்டதுபோல ஆட்டோக்களின் அணி வகுப்பு. பொருட்களை வாங்க வந்திருந்த பப்ளிக்கும்கூட “"இப்பவே கண்ணைக் கட்டுதே...'’ என்று மலைக்கும் அளவுக்கு நீண்ட கியூ. ஜே... ஜே... என்று கூட்டம்.


இவையெல்லாமே இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செய்கின்ற காரியங்கள்தானே..?’ அங்கு நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க. ஒ.செ. ஒருவரிடம் கேட்டு வைத்தோம்.. “""ஒரேயடியா அப்படிச் சொல்லிவிட முடியாது அண்ணாச்சி. நாங்க செய்யிறது தப்புன்னா தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்குமா? இல்லைன்னா எதிர்க்கட்சிகள்தான் சும்மா இருக்குமா? யாருமே எதிர்க்கலைல்ல... அப்படின்னா நாங்க செய்யிறது சரி தான்...''’என்று அழகாக சமாளித்தார்.


கணவனின் டூவீலர் பின்சீட்டில் ஃபேன் பெட்டியை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கோமதியிடம் "இடைத்தேர்தலுக்கு கணவனும் மனைவியும் தயாராகிவிட்டது போல் தெரிகிறதே..?' என்றோம்.


""என்னைக்குத் தேர்தல் வருதோ? அத அன்னைக்கில்ல பார்க்கணும். போன அரசாங்கம் கலர் டி.வி. கொடுத்துச்சு. இந்த அரசாங்கம் இதக் கொடுத்திருக்கு. எல்லாம் மக்களோட பணம். இதுகூடத் தெரியாத முட்டாச்சிறுக்கியா நான்? சும்மா கேமராவத் தூக்கிக்கிட்டு கேள்வி கேட்க வந்துட்டீக...''’-சிடுசிடுவென்று சினந்தார் கோமதி.

மீண்டும் தலைப்புச் செய்திகள் -நம்பினால் நம்புங்கள்! ஆளும் கட்சி யினருக்கு தோல்வி குறித்த பயம் துளியும் இல்லை!

-சி.என்.இராமகிருஷ்ணன்
அட்டை மற்றும் படங்கள் : ராம்குமார்

thanks nakkeeran +ghani chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக