புதன், 1 பிப்ரவரி, 2012

மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில், நயன்தாரா அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிக்க மாட்டேன் என்று கூறிய நயன்தாரா மறுபடியும் நடிக்கிறாரா? என்று கேட்க வேண்டாம்.
 நீ தான் உலகம் என்று இருந்த இந்த ஜோடிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதன் காரணம் பிரபுதேவா அடிக்கடி தன் குழந்தைகளை பார்த்துவிட்டு வருவதுதானாம். இந்த செய்தியை அறிந்த நயன்தாரா ஓணம் பண்டிகையன்று பிரபுதேவாவை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து திருப்பியனுப்பியது பழைய கதை.
 இப்படிப்பட்ட சில காரணங்களினால் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர் என்று பேசப்படுகிறது. நடிக்கலாம் என்று நினைத்தவுடன் நயன்தாராவுக்கு அடித்தது ஜாக்பாட் தான். நாகார்ஜுனா படத்தில் கிட்டத்தட்ட சீதை போன்ற தெய்வீக வேடத்தில் நடிக்க நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்.
 மற்ற நடிகைகள் எல்லாம் வயிறெரிந்த நேரத்தில் அடுத்த ஜாக்பாட், தமிழில் அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு. நயன்தாரா ஏற்கனவே அஜித்துடன் ஏகன், பில்லா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். விஷ்ணுவர்தன்-அஜித்-நயன்தாரா இணைந்த பில்லா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 இதை பற்றி கேட்ட போது விஷ்ணுவர்தன் “ நயன்தாராவுடன் பேச்சு நடப்பது உண்மை தான். ஆனால் இன்னும் அவர் ஒப்பந்தமாகவில்லை. படத்தை பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.

 தெலுங்கிலும் நல்ல படம், தமிழிலும் நல்ல படம் என்று நயன்தாரா பெருமூச்சு வாங்குவதற்குள், மும்பையில் நடக்கும் பிரபுதேவாவின் இந்தி பட ஷூட்டிங்கிற்கு பிரபுதாவாவின் முதல் மனைவி அவரது குழந்தைகளுடன் வந்து சென்றதாக யாரோ (கொளுத்தி) போன் போட்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக