புதன், 1 பிப்ரவரி, 2012

சசிக்குமார் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தை இயக்குகிறார் இயக்குனர் பாலுமகேந்திரா. கடைசியாக தனுஷ் நடிப்பில் “அது ஒரு கனாக்காலம்” என்ற படத்தை இயக்கினார். பாலுமகேந்திரா இயக்கவிருக்கும் பெயரிடப்படாத அந்த படம் சசிகுமார் தயாரிப்பில் உருவாகவிருக்கிறது.
ஒரு படம் எடுப்பதற்கே கோடிக் கணக்கில் செலவாகும் இந்த காலத்தில் பாலு மகேந்திரா படத்தின் பட்ஜட் 90 லட்ச ரூபாய். சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் கதை பெரும்பாலும் ஒரே ஒரு வீட்டினுள் தான் இருக்குமாம்.
 ”ஒரு படம் நன்றாக வருவதற்கு படத்தின் பட்ஜட் காரணம் அல்ல. படத்தின் கதையும்,கதாபாத்திரங்களும் தான் முக்கிய காரணம் என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். கோடிகள் வேண்டாம், லட்சங்கள் போதும் கண்ணால் பார்க்கக் கூடிய அளவிற்கு படம் எடுப்பதற்கு” என்று கூறியுள்ளார் பாலுமகேந்திரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக