வியாழன், 2 பிப்ரவரி, 2012

தே.மு.தி.க MLAக்கள் அ.தி.மு.க க்கு தாவும் வாய்ப்பு


தமிழக சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்,அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியில் புயலைஏற்படுத்தியுள்ளது."தே.மு.தி.க.,விற்கு வரவேண்டிய
ஏற்றம், வந்து முடிந்து விட்டது.இனிமேல், அவர்களுக்கு இறங்குமுகம்
தான்' என, சட்டசபையில் முதல்வர்அறிவித்து உள்ளதால்,
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வேண்டாம்என்ற அ.தி.மு.க.,வின் நிலை தெளிவாகி விட்டது. அதிர்ச்சி அடைந்துள்ள தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வட்டாரம், ஆளுங்கட்சி பக்கம் சாயலாமா என்று யோசித்து வருகிறது.
உள்ளாட்சியில் ஆரம்பம்: தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது;
எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்வு பெற்றார். அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததால், தே.மு.தி.க.,வும் தனித்துப் போட்டியிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள, 10 மாநகராட்சிகள் உட்பட பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது; போட்டியிட்ட இடங்களில், தே.மு.தி.க., கடும் தோல்வியைச் சந்தித்தது.
முதல்வரின் முதல் சவால்: இந்நிலையில், சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், இருகட்சிகளின் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்றுமுன்தினம் நடந்த விவாதத்தில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பண்ருட்டி ராமச்சந்திரன், "தானே' புயல் நிவாரணப் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, "இதை நிரூபிக்கத் தயாரா?' என்று சவால் விடுத்தார்.


இதனால், தே.மு.தி.க., வட்டாரம் அதிர்ச்சியடைந்தது. தலுக்கு முன்பாக இவற்றை இரண்டாவது நாளாக நேற்று விவாதத்தில் பேசிய தே.மு.தி.க., உறுப்பினர் சந்திரகுமார், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்க, அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். "உள்ளாட்சித் தேர் உயர்த்தியிருந்தால், அ.தி.மு.க., தோற்றிருக்கும்' என்ற சந்திரகுமாரின் கருத்து தான், விவாதத்தை உச்சத்திற்கு எடுத்துச் சென்றது.
நேரடி மோதல்: விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி விட்டதாகக் கூறிய முதல்வர் ஜெயலலிதா, "இந்த விலை உயர்வுக்குப் பிறகும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உங்களுக்கு திராணி இருந்தால், தனி வேட்பாளரை நிறுத்துங்கள்' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சவால் விடுத்தார். இதையடுத்து பேசிய விஜயகாந்த், "இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது சகஜம்' என்றதுடன், பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., "டிபாசிட்' பறிபோனது குறித்து குறிப்பிட்டுப் பேச, அ.தி.மு.க., அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க் களும் ஆவேசமாகி குரல் எழுப்பினர். இதற்கு, கையை நீட்டி மிரட்டும் பாணியில் விஜயகாந்த் பதிலடி கொடுக்க, அவரும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர்.
ஒரு இடம் கிடைத்திருக்காது: இதன் பிறகு பேசிய முதல்வர் ஜெயலலிதா, "அ.தி.மு.க., கூட்டணி இல்லாவிட்டால், சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., ஒரு இடத்தில் கூட வென்றிருக்க முடியாது. தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்' என்றார். மேலும், "தே.மு.தி.க., விற்கு வரவேண்டிய ஏற்றம் வந்து முடிந்து விட்டது. இனிமேல் அவர்களுக்கு இறங்குமுகம் தான். அதை சரித்திரம் சொல்லும்' என, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்< கூட்டணியில் இருந்து தே.மு.தி.க.,விற்கு, "கல்தா' கொடுக்கப்பட்டுள்ளதால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வுடன் தோழமைக் கட்சியாகநான்கரை ஆண்டுகள் இருந்தால், தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும்; எதிர்க்கட்சியாக மாறினால் எப்படி காலம் தள்ளுவது என்ற புலம்பல், தே.மு.தி.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது. இத்தகைய குழப்பத்தில் உள்ளவர்கள், ஆளுங்கட்சிக்கு தாவவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக