செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கதை தான் முக்கியம்! ஹீரோவின் வயது அல்ல! த்ரிஷா

வயதான ஹீரோக்களுடன் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என த்ரிஷா கூறியுள்ளார். நடிகைகள் மார்க்கெட் ஏறும் வரை தான் வயதான ஹீரோக்காளுடன் நடிப்பார்கள் அதன் பிறகு இளம் ஹீரோக்களுடன் தான் நடிப்பார்கள் என்ற பேச்சு சினிமா துறையில் உலா வந்து கொண்டிருப்பதை பற்றி கேட்கும் போது த்ரிஷா
 “வயதான கதாநாயகர்களுடன் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஹீரோவின் வயது முக்கியம் அல்ல. கதை தான் முக்கியம். கதையை பொறுத்து தான் படம் ஓடுவதும் ஓடாததும். ஹீரோவின் வயது அதிகமாக இருக்கிறது என்பதற்காக படம் ஓடாமல் இருப்பதில்லை. 
ஒரு ஹீரோயினாக கதையில் என் கதாபாத்திரத்தின் பங்களிப்பில் தான் கவனம் செலுத்துவேனே தவிர, ஹீரோவின் வயதில் அல்ல. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் என்னை விட வயதில் சிறியவரான சிம்புவுடன் நான் நடித்திருக்கிறேன்.” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக