செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பார்த்தீபன் காட்டம்! என் நிலைமை மாறிவிட்டது!

நடிகர் பார்த்தீபனின் வித்தகம் படம் வெளியாகி நன்றாக ஓடியது. அடுத்ததாக பார்த்தீபன் நடிக்கும் படம் பற்றி கேட்ட போது ” என் கிட்டயா கேக்குறீங்க! ”ஆப்பு” தான். அடுத்ததாக நான் நடிக்கும் படத்தின் பெயர் ஆப்பு(அவுட்சோர்ஸிங்). இந்த படத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் தவறுகளையும், தீய சக்திகளை பற்றியும் ரசிகர்களுக்கு தோலுரித்துக் காட்டப் போகிறேன்.
 இந்த படத்தில் நடிக்க ப்ரியாமணியையும், ப்ருத்விராஜையும் நடிக்க வைக்கத் திட்டமிட்டேன். ஆனால் கால்ஷீட் இல்லையாம். எனவே வேறு நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். படத்தின் திரைக்கதை முடியும் நிலையில் உள்ளது” என்று கூறினார். படத்தை நான் இயக்கவில்லை என பார்த்தீபன் கூறினாலும், அவர் தான் இயக்குவார் ந்ன சிலர் கண்ணடிக்கின்றனர். 

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் நடிக்கவில்லையாமே? என்று கேட்டதற்கு “அமீர்  நடிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது. மறுபடியும் என்னை நடிக்க கூப்பிட்டாலும் நான் நடிக்க மாட்டேன். அப்போது இருந்த பார்த்தீபன் வேறு, இப்போது இருக்கும் பார்த்தீபன் வேறு” என்று கூறியுள்ளார்.

 பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் நடிக்கும் கதாபாத்திரத்தில், அமீருக்கு முன் பார்த்தீபன் தான் தேர்ந்தெடுக்கபட்டார். அதன் பிறகு பார்த்தீபனுக்கே தெரியாமல் அவர் படத்திலிருந்து  நீக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக