சனி, 18 பிப்ரவரி, 2012

மார்ட்டின் கைது விமானத்தில் லாட்டரி சீட்டு கடத்தல்


Martin
கோவை: விமானத்தில் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியதாக படத்தயாரிப்பாளரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த மாதம் 13ம் தேதி பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஜீவானந்தத்திற்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஒரு கண்டெனரில் கோவை விமான நிலையத்திற்கு 30 லட்சம் மதிப்பிலான தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வருவதாக தெரியவந்தது.உடனடியாக அவர் தலைமையிலான தனிப்படையினர் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று குறிப்பிடப்பட்ட கண்டெய்னரை சோதனை செய்தனர்.

அதில் 30 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் தொடர்புடைய ஆனந்த் என்பவரை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின்தான் இதன் பின்னணி என்றார்.

உடனே பீளமேடு காவல்துறை ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று அங்கு ஏற்கனவே பல வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாட்டினை கைது செய்து அதற்கான உத்தரவை அவரிடம் வழங்கினர்.

மேலும் இந்த வழக்கில் அவரது நண்பர் கணேசனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள மார்ட்டினின் மைத்துனர் ஜான் பிரிட்டோவை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக