சனி, 18 பிப்ரவரி, 2012

அழகிரியே பெட்டர்’ என கலைஞரே நினைத்துவிட்டாராம்

நான் சொன்ன ‘ஆகாயத்தில் போட்ட அச்சாரம்’ கதையின் மிச்சத்தையும் முடித்துவிடுகிறேன். வீரபாண்டியார் - ஸ்டாலின் மோதல் சிக்கல் ஒருபக்கம் நடக்கும் நிலையில், ராசாத்தி அம்மாளும் கடும் கோபத்தில் இருக்கிறாராம். கட்சியின் மாநில மகளிர் அணிக்கு கனிமொழியைத் தலைவியாக்க சமீபத்தில் நடந்து முடிந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எந்த மாற்றுக் கருத்தும் வரவில்லையாம்.
இருந்தும் ராசாத்தி அம்மாள் ஒற்றைக் காலில் நின்று வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்...’’
‘‘ஏனாம்?’’
‘‘குஷ்புவை எப்படியும் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பு கச்சை கட்டி நிற்கிறதாம். இதுதான் ராசாத்தி அம்மாளின் பயங்கர கோபத்துக்குக் காரணம். மேலும், கனிமொழியும் அழகிரியின் மகள் கயல்விழியும்கூட, ‘குஷ்புவுக்கு ஏன் தளபதி தரப்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?’ என சீறினார்கள ம். ஒருபக்கம் அண்ணனுக்கு ஒரு செக்... இன்னொரு பக்கம் மறைமுகமாக சகோதரிக்கு ஒரு செக்... இதுதான் தளபதியின் மூவ் என நினைக்கிறார்களாம்.’’

‘‘ஓ’’

‘‘மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரோடு கூட்டணி வைப்பது என்ற விவாதத்திலும்கூட சர்ச்சை நடந்ததாம். எப்படியும் விஜயகாந்தை கூட்டணிக்குள் வளைத்துப் போட்டுவிட வேண்டும் என ராசாத்தி அம்மாள் தரப்பு முனைப்பாக இருந்ததாம். கனிமொழிக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடக்க... தொகுதி சீட்டுகள் கம் சில ‘ப’ விட்டமின் விவகாரம் குறித்தும் அலசி, ஓ.கே. என பேச்சு கனிந்துவிட்டதாம். இது கட்சித் தலைமைக்குச் சொல்லப்பட்ட நிலையில், ஸ்டாலின் தரப்பு மட்டும் ‘ஏன் வீண் வேலை?’ என கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டதுடன் தவிர்த்துவிட்டதாம். ‘அப்போதே கேப்டன் தலையைப் பிடிக்காமல் இப்போது வாலைப் பிடிக்க ஸ்டாலின் தரப்பு குலாவுகிறது. ஆரம்பத்தில் கனிமொழியால் ஏற்பட்ட கூட்டணியை ஸ்டாலின் சம்மதித்திருந்தால் இந்த வீழ்ச்சி நடந்திருக்காது. அப்போதும் அவருக்கு பக்குவம் இல்லை; இப்போதும் இல்லை’ என காய்ச்சி எடுக்கிறதாம் ராசாத்தி தரப்பு..’’
thanks kumudam + chandran NH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக