சனி, 18 பிப்ரவரி, 2012

Chennai புதிதாக வளர்ந்து வரும் மெடிக்கல் டூரிஸம்

ம்மில் பலரும் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது மட்டுமே மருத்துவமனைகளைத் தேடுகிறோம், அப்படித் தேடும்போது சில நேரங்களில் நேரப்பற்றாக்குறை, எமர்ஜெ ன்சி போன்ற காரணங்களால் ஒரே வளாகத்தில் அனைத்துவிதமான உடல்நலக் குறைபாடுகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளைப் பற்றிய விவரங்கள் அறிந்தும் கூட அங்கே போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அவகாசம் நமக்கு இருப்பதில்லை .
இதனால் என்ன ஆகிறது? நாம் விரும்பும் மருத்து வமனைக்குச் செல்ல முடியாத பட்சத்தில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் என்ற ரீதியில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள நேர்கிறது.இப்படியான சூழலைத் தவிர்க்க, சென்னையின் பிரபலமான மருத்துவமனைகள் பற்றியும் அங்கே கிடைக்கக் கூடிய அனைத்துவகையான சிகிச்சை முறைகளுக்கான பட் டியல் குறித்தும், அங்கே வந்து செல்லும் வெளிமாநில, வெளிநாட்டு நோயாளிகளோடு தற்போது புதிதாக வளர்ந்து வரும் துறையான மெடிக்கல் டூரிஸம் பற்றியும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உதவலாம்.நீங்கள் இப்போது சென்னையில் வசிப்பவரா ?சென்னை உங்கள் சொந்த ஊரா? அல்லது வேலைக்காக நீங்கள் வந்த ஊரா? எப்படியாக இருந்தாலும் சென்னையைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் தெரிந்தே இருக்குமில்லையா? சென்னை எதற்கெல்லாம் பிரசித்திபெற்ற ஊர்? சென்னையின் ட்ரேட் மார்க் மெரீனா பீச், எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்கள், உலகம் முழுவதும் உள்ள சங்கீத ரசிகர்களால் வருடம் தவறாது கொண்டாடப்படும் டிசம்பர் மாதத்து சங்கீதக் கச்சேரிகள்
இலக்கிய ஆர்வலர்களுக்கு ஜனவரி மாதத்து புத்தகத் திருவிழா, ஆன்மிக ஆர்வலர்களுக்கு மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், பக்திக்கு கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், சினிமா ஆர்வலர்களுக்கு கோடம்பாக்கம், பண்ட பாத்திரங்களுக்கு சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர்கள்.

ஷாப்பிங்கா இருக்கவே இருக்கிறது தி.நகர்., ரங்கநாதன் தெரு, பட்டுக்கு நல்லி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி. இப்படி நீண்டுகொண்டே போகும் லிஸ்ட்டில் சென்னையின் மருத்துவமனைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு.

· கண்ணுக்கு சங்கர நேத்ராலயா, அகர்வால் மருத்துவமனைகள்.

· காதுக்கு கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். மருத்துவமனை.

· இதயத்திற்கு ட்ரிபிள் எம், செரியன் மருத்துவமனைகள்.

· எல்லா வகை கேன்சர்களுக்கும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்.

· சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பெறும் சிகிச்சைக்கு நுங்கம்பாக்கம் ஜி.ஜி மருத்துவமனை.

ஒட்டுமொத்தமாய் அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் பொதுவாக சென்னையின் சிறந்த மருத்துவமனைகள் என்று பட்டியலிட்டால் அந்த லிஸ்ட்டில்;

· அப்பல்லோ மருத்துவமனை
· சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை
· போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை
· மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை
· மைலாப்பூர் இசபெல்லா மருத்துவமனை
· மியாட் மருத்துவமனை
· பில்ராத் மருத்துவமனை
· மலர் மருத்துவமனை
· லைஃப் லைன் மருத்துவமனை
போன்ற மருத்துவமனைகள் எல்லாம் வருகின்றன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளே. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி என்றால் ஒரே கூரையின் கீழ் நீங்கள் உங்களது எல்லா விதமான நோய்களுக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவமனைகள் ஏதாவது ஒன்றில் மேலே உள்ள பட்டியலில் நமக்குத் தேவைப்படும் சிகிச்சைகளை நாம் பெறும் வசதி உண்டு என்பதுதான் அவற்றின் தனிச் சிறப்பு. ஒவ்வொரு மருத்துவமனையும் அதன் திறமையான மருத்துவர்கள், பொறுப்புணர்வு மிகுந்த கனிவான செவிலியர் சேவை, ஆய்வுக்கூட வசதிகள், கேண்டீன், சுத்தம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு வசதிகள், வெற்றிகரமான சிகிச்சை வசதிகளின் அடிப்படையில் தனக்கென்று கணிசமான எண்ணிக்கையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளை கொண்டுள்ளது.

சென்னையின் மருத்துவ வசதிகளை நாடி தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இ ருந்தும் நைஜீரியா, கென்யா, புருண்டி, காங்கோ, பங்களா தேஷ், ஓமன், ஈராக் போன்ற அயல்நாடுகளில் இருந்தும் கூட நோயாளிகள் மிகுந்த நம்பிக்கையோடு வரு கிறார்கள். இந்தத் தேடலை மையமாக வைத்துத் தோன்றியதே மெடிகல் டூரிஸம் எனும் மகத்தான சேவை.

இந்த நோயாளிகள் சென்னையைத் தேடி வருவதற்கு சென்னை மருத்துவமனைகளின் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் ஒரு காரணம் என்றாலும் அவை தவிர பிற காரணங்களும் இருக்கின்றன். அயல்நாடுகளைப் பொறுத்தவரை புகழ் பெற்ற மருத்துவமனைகள் அனைத்திலும் சிகிச்சை வேண்டி வருடக்கணக்காக காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியல் நீளமானது. அங்கே சிகிச்சைக்காக காத்திருக்க முடியாத அவசரக் காலங்களில் பெரும்பாலான நோயாளிகள் அதற்கடுத்த சிறப்பான சிகிச்சை எங்கு கிடைக்கும் என்று தேடுகிறார்கள். இது மட்டுமல்ல வெளிநாடுகளையும் வெளி மாநிலங்களையும் ஒப்பிடுகையில் சென்னை மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட் டணங்களும் குறைவு என்று தோன்றுவதால் அதற்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகம்.

மெடிக்கல் டூரிஸம் என்றால் என்ன?
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாதந்தோறும் 100க்கு மேற்பட்ட வெளிநாட்டு நோயாளிகள் வந்து செல்கிறார்கள் என்று அம்மருத்துவமனையின் நோயாளிகளின் புள்ளிவிவரப் பதிவேடு கூறுகிறது.

இதே போல மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மாதம் தோறும் 14 நோயாளிகளுக்கு மேற்பட் டவர்கள் வருகிறார்களாம்.

மலர் மருத்துவமனைக்கு மாதம் தோறும் கார்டியாக், ஆர்த்தொபெடிக், கார்டியோ தொராகிக் சர்ஜரி, ஆன்காலஜி, நியூரோ சர்ஜரி சிகிச்சைகளைப் பெற 15 முதல் 20 அயல்நாட்டு நோயாளிகள் வந்து செல்வதாக அம்மருத்துவமனை இன்டர்நேஷனல் பிசினஸ் மேனேஜர் டி.ஐ.ஜோசுவா ‘தி ஹிந்து’ நாழிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

பற்கள் மற்றும் தாடைகள் சீரமைப்பிற்கான தனிப்பட்ட சிகிச்சைகளுக்காக ஆச்சார்யா மற்றும் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி மருத்துவமனைகளுக்கு கணிசமான அயல்நாட்டு நோயாளிகள் வந்து செல்வதாக மருத்துவப் புள்ளிவிவர ஏடுகள் தெரிவிக்கின்றன.

இப்படி வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை மருத்துவமனைகளின் சிகிச்சையை நம்பி நோயாளிகள் வருவதற்கு அவர்களது நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற மருத்துவமனைகளின் சிகிச்சைக்கட்டணங்கள் அதிகம், நோயாளிகளின் காத்திருப்பு லிஸ்ட் நீளம் என்ற காரணங்களைத் தவிர்த்து மற்றொரு மிகப் பெரிய காரணம் ஒன்று உள்ளதெனில், அது பல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த மருத்துவமனைகள் இருந்தாலும்கூட, அங்கெல்லாம் நமது தமிழக மருத்துவமனைகள் போன்று திறமை வாய்ந்த மருத்துவர்களும் அனுபவம் மிக்க செவிலியர்களும் கிடைப் பதில்லை என்பதே! இந்த விஷயத்தில் நமது தமிழர்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது.

இப்படி அயல்நாடுகளிலும் அயல் மாநிலங் களிலும் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் பலர் சிகிச்சை முடிந்த உடன் அப்படியே ஊர் திரும்பி விடுவதில்லை. இங்கிருக்கும் நமது கலாச்சார சின்னங்கள், தொன்மை சிறப்பு வாய்ந்த இடங்களான; மாமல்லபுர சிற்பங்கள், காஞ்சிபுரத்துக் கோயில்கள், மதுரை சமணர் குகைகள், பாண் டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம், திருப்பதி தரிசனம், சிதம்பரம் நடராஜர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், நாயக்கர் மஹால், தஞ்சை பெரிய கோயில், கேரளா குமரகம் போன்ற சுற்றுலா மையங்களுக்கும் சென்று வரத் தவறுவதில்லை. இதைத்தான் மெடிக்கல் டூரிஸம் என்பார்கள்.

சிகிச்சைக்கு சிகிச்சையுமாச்சு சுற்றுலாவுக்கு சுற்றுலாவுமாச்சு!
அப்படி என்னென்ன துறைகளின் கீழ் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன?
· அனஸ்தீசியா சிகிச்சைகள் · கார்டியாக் கேர் · கார்டியோ தொராகிக் சர்ஜரி · காஸ்மெடிக் சர்ஜரி · கிரிட்டிகல் கேர் · டெர்மடாலாஜி தோல் தொடர்பான சிகிச்சைகள் · டயாபட்டாலாஜி நீரழிவு நோய் சிகிச்சைகள் · எமர்ஜென்சி · என்டோகிரைனாலாஜி · எண்டோ கிரைன் சர்ஜரி · காத்து, மூக்கு, தொண்டை சிகிச்சை · கேஸ்ட்ரோ என்ட்ராலாஜி இரைப்பை மற்றும் குடல் தொடர்பான சிகிச்சைகள் · பொது மருத்துவம் · பொது அறுவை சிகிச்சை · Geriatrics முதியோர் மருத்துவம் · Hematology ரத்த வகைகளின் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் · Infectious disease தொற்று நோய் மருத் துவம் · ஆய்வுக்கூட சேவைகள் · நியோநேட்டாலாஜி பிறந்த குழந்தைகளுக்கான அடிப்படை மருத்துவ சிகிச்சை tலீuக்ஷீணீவீ · நெப்ஃராலாஜி · Neurology நியூராலஜி · நியூக்ளியர் மெடிசின் · மகப்பேறு மருத்துவம் · Ophthalmology கண் மருத்துவம் · Orthopaedic surgery எலும்பு முறிவு அறுவை சிகிச்சை · Paediatrics குழந்தை மருத்துவம் · Paediatric சுர்கேரி பீடியாட்ரிக் அறுவை சிகிச்சை · பிசியோதெரபி · பிளாஸ்டிக் சர்ஜரி · ரேடியாலஜி அண்ட் இமேஜிங் துறை · Res piratory மேடிசினேசுவாச மருத்துவம் · ருமட்டாலாஜி · இனப்பெருக்க அறுவை சிகிச்சைகள் · பாலியல் மருத்துவம் · மார்பு அறுவை சிகிச்சை · Vascular surgury ரத்த நாள அறுவை சிகிச்சை · யூராலாஜி
thanks kumudam + ravi singapore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக