சனி, 28 ஜனவரி, 2012

Carnatic Whistle concert விசில் இசைக்கலாம் வாங்க


விசில் இசைக்கலாம் வாங்க!' விசில் அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் அருண்குமார்: மகிழ்ச்சியை வெளிப் படுத்தவும், பெண்களைக் கிண்டல் செய்யவும், வயசுப் பசங்க அடிப்பது விசில்; அதனால் தான், பலருக்கு விசில் என்றாலே அலர்ஜியாகிவிட்டது. ஆனால், எங்கள் பாணியில் சொல்வதானால், விசில் இசைப்பது, அது இதழ்களிலிருந்து வரும் இதழ் ஒலி இசை. விசில் இசைப்பது பெரிய கலை; இதில் மூன்று வகைகள் உள்ளன. காற்றை உள்ளிழுத்து இசைப்பது, வெளிவிட்டு விசில் செய்வது, பற்களுக்கிடையில் விசில் செய்வது. முறையான தனிப் பயிற்சி மூலம் தான், விசில் இசைக் கலைஞராக முடியும். கர்நாடக, பஜன், மெல்லிசை என்று, எல்லா வகை பாடல்களையும் விசிலில் இசைக்க முடியும்.
பல பறவைகளின் ஒலியையும், விசிலில் கொண்டு வரலாம். விசில் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுபவர்களும் உள்ளனர். மூன்று வயது முதல், யார் வேண்டுமானாலும், விசில் இசைப் பயிற்சி பெறலாம். சிகரெட் பிடிப்பவர்கள், விசில் கற்க நினைத்தால் முடியாது. விசில் இசையில் அபரிமிதமான பிரியத்தால், சிகரெட் பழக்கத்தை விட்டவர்களும் உண்டு. ஒரு நாளைக்கு மூன்று முதல், ஆறு மணி நேரம் விசில் பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம் இருப்பவர்கள், விசில் இசைத்தால், மனம் லேசாகி விடும். அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் விசில் இசைப் பிரியர்கள் அதிகம் உள்ளனர். சவர்தேச அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்காக அவர்கள் உள்ள இடத்திற்கே சென்று, விசில் இசை நிகழ்ச்சி நடத்துகிறோம். இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர, ஆண்டிற்கு 1,800 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இந்தப் பொழுதுபோக்கு கலையைப் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக, பள்ளிகளில் பல போட்டிகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக