திங்கள், 9 ஜனவரி, 2012

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக பொதுக்குழு கூடுகிறது!


Karunanidhi
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
உள்கட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், 2ஜி விவகாரத்தில் தணிக்கைக் குழு அறிக்கை தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இக் கூட்டம் கூடும்.
2ஜி வழக்கில் கனிமொழி விடுதலைக்குப் பின் நடக்கும் முதல் திமுக பொதுக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக