திங்கள், 9 ஜனவரி, 2012

பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

பெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கம் தமிழர்களுக்கு தூரோகம் செய்துவிட்டது என்று சொல்கிறார்களே உண்மையா?
-தமிழ்ப்பித்தன், திட்டக்குடி.
புதுசா இப்ப நிறையப் பேர் அப்படி கிளம்பி இருக்காங்க. தமிழகத்தில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமாக போராடிய திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’ என்று நாம் வாய பொளக்குறதுக்குள்ளேயே திராவிட இயக்கத்தின் கழிசைடையான ஜெயலலிதாவை ஆதரித்து தங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறார்கள்.
கலைஞரை கடுமையாக விமரிசிக்கிறார்கள்.
கருப்பையா மூப்பனாரை மாபெரும் தியாகி என்கிறார்கள்.
திமுகவை ‘ஜாதியை வளர்க்கும் கட்சி’ என்று விமர்சிக்கிறவர்கள்; தமிழக்கதில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்து ஜாதி ஆதிக்கத்தை நிலைநாட்டிய தீவிர ஜாதிவெறியர், ஊழல் மன்னன் ராஜாஜியின் ஆட்சியை நேர்மையான ஆட்சி என்று பாராட்டுகிறார்கள்.
பல கோல்மால் பேர்வழிகள் இப்படி பெரியார் இயக்கத்தை, திராவிட இயக்கத்தை கடுமையான விமசிக்கிறார்கள்.
உண்மையில் இவர்களுக்கு பெரியாரை அல்ல, விஜயகாந்தை விமர்சிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லை.

mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக