சனி, 28 ஜனவரி, 2012

வேதிகாவுக்கு பாலா ட்ரீட்மெண்ட் - வெயிலில் காயும் ஹீரோயின்

பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தின் ஹீரோயினாக வேதிகா நடிக்கிறார். படத்திற்கு “எரியும் தனல்” என்று பெயர் வைக்கப் போவதாகவும் பேச்சசுட்டெரிக்கும் வெயில் கடலோரத்தில் மட்டும் என்ன குலு குலுவெனவா இருக்கப் போகிறது. இந்த கடும் வெயிலில்தான் நாலு மணி நேரத்திற்கும் மேலாக காய்ந்து கொண்டிருக்கிறாராம் வேதிகா. பாலா தத்ரூபமாக படமெடுப்பவர். அவர் படத்தில் மேக்கப் போடுவது என்றால் நடக்காத காரியம்.ஹீரோயின் கொஞ்சம் கருப்பாக வேண்டும் என்பதற்காக வெள்ளைத் தோலுடைய பெண்ணான வேதிகாவை பிடித்து தினமும் வெயிலில் நிற்க வைத்து தன் கதைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கிறாராம் பாலா.
”நான் கடவுள்” படத்தில் இந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுத்ததால் தான் பாவனா படமே வேண்டாம் என ஓடியதாக பேசப்பட்டது.ஹீரோயின் கதி தான் இப்படி என்று பார்த்தால் ஹீரோ இதற்கு மேல். தெரியாமல் ஒரு ஃபோன் கால் அட்டண்ட் பண்ணி பேசிவிட்டாட்ராம் அதர்வா. அதற்கு “இதுக்கப்புறம் யார் கைலயாவது ஃபோனை பாத்தேன், தொலச்சிபுடுவேன்” என்று மறைமுகமாக குட்டு வைத்தாராம் பாலா
ஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிருத்தத்தால் சினிமா துறை முடங்கிக் கிடக்கிற நேரத்தில், நடிகர்களுக்கு கருணை காட்டாமல் பெண்டெடுக்கும் பாலா, டெக்னீஷியன்கள் கேட்ட அதிக சம்பளத்தை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக