சனி, 28 ஜனவரி, 2012

பாரதிராஜா - அமீர் : மோதல்!

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “அன்னக்கொடியும் கொடிவீரனும்”. பாரதிராஜாவின் கிராமிய பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கிறார். ஹீரோயின்களாக இனியா மற்றும் கார்த்திகா நடிக்கின்றனர்.
படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்த நேரத்தில், கேரளாவுடன் ஏற்பட்ட முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கேரள நடிகைகளான கார்த்திகாவும், இனியாவும் பாரதிராஜாவால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். “கேரளாவுடனான பிரச்சினை தீர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டார் பாரதிராஜா.
அதன் பின் ஹீரோயின்கள் இல்லாத காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு துவங்கப்பட்ட பின், சில பிரச்சினைகளால் பாரதிராஜாவிற்கும், அமீருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து அமீர் நீக்கப்பட்டதாகவும், இயக்குனர் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறொரு ஹீரோவை தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தில் அமீர் நடிப்பதற்கு முன் நடிகர் பார்த்திபன் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் பார்த்திபன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். பாரதிராஜா படத்தில் நடித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நடிப்பதற்கு முன்பே எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துவிட்டது என்று குமுறினார் பார்த்திபன்
அந்த சமயம் அமீருக்கும், பாரதிராஜாவுக்கும் முட்டலும் மோதலுமாக இருந்தது வந்த நிலையில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் நடிக்கிறார் என அறிவித்தார் பாரதிராஜா. அப்பனுக்கும் மகனுக்கும் நடந்த சண்டைதான், எனக்கும் அமீருக்கும் நடந்தது. நாங்கள் சேர்ந்து பணியாற்றுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றார் பாரதிராஜா.இப்பொழுது மீண்டும் அமீர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி திரைஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக