திங்கள், 23 ஜனவரி, 2012

திருமணத்துக்குப் பின் நடிப்பாரா சினேகா...? என்ன சொல்கிறார் பி்ரசன்னா?


காதலை நேர்மையாக ஒப்புக் கொண்ட சினிமா ஜோடி என்ற பெருமை (அவர்களின் பிஆர்ஓ புண்ணியத்தில்!) யைப் பெற்ற சினேகாவும், பிரசன்னாவும், தங்களின் திருமணம் மற்றும் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை திட்டம் குறித்து பத்திரிகை - தொலைக்காட்சிகளில் பேட்டிகள் அளித்து வருகிறார்கள்.
அடுத்தமாதம் தங்களின் திருமணத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு, சினேகா நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.
சினேகா தற்போது சரத்குமாருடன் விடியல், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் புதிய படம் மற்றும் ரஜினியின் கோச்சடையான் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்கள் முடிவதற்கு முன்பே, திருமணம் நடக்கக் கூடும் என்பதால், திருமணத்துக்குப் பிறகும் சினேகா நடிப்பார் என்கிறார்கள்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று சினேகாவிடம் நான் சொல்ல வில்லை. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் சினேகா அதை ஏற்பாரா என்று தெரியவில்லை. அவர் நடிப்பதற்கு ஒரு போதும் நான் தடை போட மாட்டேன். அவர் விருப்பம்தான்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக