திங்கள், 23 ஜனவரி, 2012

Tamilnadu: 892 நர்ஸ்கள் திடீர் கைது

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் செவிலியர் பட்டய படிப்பு முடித்த 1861 மாணவ, மாணவியருக்கு அரசு பணியில் சேர்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2010ம் ஆண்டு நடைபெற்றது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் 969 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 892 பேர் அரசு பணிக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதனால் அவர்களுக்கு பணி ஆணை வழங்குவது தாமதமானது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அரசு பணி கிடைக்கும் என்று காத்திருந்த 892 பேருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
பாதிக்கப்பட்டவர்கள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், முதன்மை செயலாளர், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகளின் இயக்குனர் ஆகியோரிடம் தங்கள் கோரிக்கையினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கான பணித் தேர்வு புதிய முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் செவிலியர் பயிற்சி முடித்த மாணவ¤கள் தங்களுக்கு அரசு வேலை கிடைக்காது என அச்சமடைந்தனர். மேலும் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்றவர்களும் அரசு பணியில் சேர்க்கப்படுவார்கள் என கடந்த வாரம் அரசாணை ஒன்று பிறக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட 892 நர்ஸ்கள், இன்று காலை தலைமை செயலகம் முன்பு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்தனர். தலைமை செயலகத்துக்கு எதிரே உள்ள பூங்காவில் அவர்களை அமர வைத்தனர்.
அவர்களில் 5 பேரை மட்டும் அழைத்து சென்று தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி கூறினர். ‘ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம்’ என நர்ஸ்கள் கூறினர். இதையடுத்து நர்ஸ்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வால்டாக்ஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் நர்சிங் படிப்பு முடித்த 892 பேர் அரசு வேலை கேட்டு சென்னை கோட்டையில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக