ஞாயிறு, 4 டிசம்பர், 2011

Nano நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரிப்பு


Tata Nano

நானோ கார் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த மாதம் நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரித்துள்ளது.
உலகின் குறைந்த விலை காராக இன்று வரை பெயரை தக்கவைத்து வரும் நானோ காரின் விற்பனை தொடர்ந்து சரியத் துவங்கியது. இதனால், நானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகை திட்டங்களையும்,விளம்பர பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.
இதனால், நானோ கார் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் செல்ல துவங்கியுள்ளது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,401 நானோ கார்களை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டு விற்பனையுடன்(509 கார்கள்) ஒப்பிடும்போது 12 மடங்கு உயர்ந்துள்ளது.
இது 12 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நானோ விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கிடைத்த பலனாகவே இது கருதப்படுகிறது.
இதேபோன்று, இண்டிகா வரிசை கார்களின் விற்பனையும் நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 5,716 இண்டிகா வரிசை கார்களை விற்றிருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 10,926 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 91.15 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக