ஞாயிறு, 4 டிசம்பர், 2011

வடிவேலு அதிமுகாவுக்கு வரும்? ஆனால் வராது ?

வடிவேலு அரசியல்: ‘கைப்புள்ள கதை’ எதற்கு வெள்ளி இரவு ரிலீஸ்?

Viruvirupu

Chennai, India: The rumor mill has started within the last 24 hours on actor Vadivelu, that he may soon to bounce back to AIADMK. During the last state assembly elections,  DMK had unleashed Vadivelu to check Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) president Vijayakanth, who was contesting in alliance with the Jayalalitha-led AIADMK.

Vadivelu ran a vibrant, and at times virulent, campaign against Vijayakanth. Unfortunately for Vadivelu, the AIADMK alliance swept the polls.  Naturally, in an industry where sycophancy works as a double-edged sword, Vadivelu went out of favour. Now, what is the story behind this rumor about his bounce back?

சும்மாவே வதந்திகளுக்குப் பஞ்சமில்லாத கோடம்பாக்கத்தில் கடந்த 24 மணிநேரமாக சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஒரு வதந்தி, அரசியல் வட்டாரங்களிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோடம்பாக்கம் சினிமாவில் காமெடி ரோல்களில் நடிக்கும் (அல்லது, நடித்துக் கொண்டிருந்த?) வடிவேலுதான் இந்த வதந்திகளில் ஹீரோ!
சினிமாப் பாணியில் சொல்வதானால், வதந்தியின் ஒன்-லைன், “வைகைப் புயல் அ.தி.மு.க.-வில் சுழன்றடிக்கப் போகின்றது”

வை.பு., 6 மாதங்களுக்கு முன்னர் எங்கே சுழன்று அடித்துக் கொண்டிருந்தது என்பது என்பது தெரிந்த விஷயம்தான். நாம் விசாரித்தவரை, தற்போது இவரைப் பற்றி கிளப்பி விடப்பட்டுள்ள வதந்தி, ‘ஒரு காரணமாகத்தான்’ கிளப்பி விடப்பட்டுள்ளது. இது டபுள்-ஃபயரிங் விவகாரம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
சரி, கதை என்ன?
இந்த ஒரிஜினல் மதுரைக்காரரை தி.மு.க. மேடைகளுக்கு இழுத்து விட்டவர் தி.மு.க. ஆட்சியின் மதுரை மன்னர் அழகிரி. அவருக்கும் இவருக்கும் இடையே மதுரைப் பக்கத்தில் இருந்த கனெக்ஷன், இவரை அடுத்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான் என்று நம்ப வைத்ததில், இவரும் மேடையில் குதித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நேரம் அது. தொகுதி தொகுதியாக முடிவுகள் தி.மு.க.-வுக்கு பாதகமாக வந்துகொண்டிருந்தது. மதுரையில் அழகிரி முகாமில் கனத்த மௌனம் நிலவிக்கொண்டிருந்தது. அப்படியான நேரத்தில் தலையைக் காட்டிய வடிவேலு, அஞ்சாநெஞ்சரிடம் “அண்ணே நெசமாலுமே அவுக செயிச்சுக்கிட்டு இருக்காய்ங்களா?” என்று அப்பாவியாகக் கேட்டதாக மதுரை தி.மு.க.-வினர் பின்னாட்களில் சொல்லிச் சிரித்துக் கொண்டார்கள்.
மறுநாள் செய்தித்தாள்களில் பார்த்து ‘நெசமாலுமே’ தனக்கு சிக்கல் வந்ததை உணர்ந்து கொண்டார். சென்னையில் இருக்காமல் சிறிதுகாலம் மதுரையில் வந்து தங்கிக் கொண்டார். மதுரையில், மன்னரின் படைத் தளபதிகளே காவல்துறைக்குப் பயந்து பாய்ந்தோடத் தொடங்கிய நேரத்தில், விதூஷகர் நின்று வித்தை காட்ட முடியுமா? சென்னைக்கு சென்றார், வெளிநாட்டுக்குச் சென்றார்.
சிறிது கால இடைவெளியின்பின் திரும்பி வரும்போது, சினிமா கனவுக் காட்சிபோல எல்லாம் மறைந்து கிளீன் ஸ்லேட்டாகி விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு அதிர்ச்சி. நடந்தது கனவுக் காட்சியல்ல, கிளைமாக்ஸ் என்று புரிந்தது.
தேர்தல் முடிவுகளுடன் குறுகிய காலத்தில் கைமாறிய திரையுலக அதிகார வட்டம், இவருக்கு கட்டம் கட்டிவிட்டது.
வைகைப்புயல் சினிமா உலகில் காசில் கறார் பேர்வழி என்றாலும், இன்டஸ்ட்ரியில் அவருக்கு நெருக்கமான ஆட்களும் பெரிய அளவில் உள்ளனர். ஆனால், அவர்களாலும் இவருக்கு ஒரு ரீ-என்ட்ரி கொடுக்க முடியாதபடி இருந்தது சூழ்நிலை. அதனால் சிறிது காலம், புயல் அடங்கி இருந்தது.
மீண்டும் இவருக்கு அதிஷ்டம், விஜயகாந்த் என்ற ரூபத்தில் வந்து கதவைத் தட்டியது.
அவர் இவருக்கு சான்ஸ் கொடுத்தார் என்பதல்ல அதன் அர்த்தம். புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து அ.தி.மு.க. விஷயத்தில் அநியாயத்துக்கு அடக்கி வாசித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் தான் கழட்டி விடப்பட்டதுடன் முதலில் மறைமுகமாக அ.தி.மு.க.-வுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார். அந்தப் பேச்சு, அ.தி.மு.க. மீதான நேரடித் தாக்குதலாக மாறியது. அடுத்த கட்டம், ஜெயலலிதாவை விமர்சிக்கத் தொடங்கினார்.
இப்போது, விஜயகாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.-வுக்கும் ஏற்பட்டது. “இவருக்கெல்லாம் நீங்க போய் பதில் சொலிட்டு இருக்க வேணாம்மா, புயலை உள்ளே கொண்டு வரலாம். அவரது ஸ்பெஷாலிட்டியே விஜயகாந்த் மேட்டர்தான்” என்று ஆலோசனை கொடுக்கப்பட்டது.
புயலுக்கு சான்ஸ் கொடுப்பது என்று முடிவாகியது. கால்ஷீட் கொடுக்க புயலும் ரெடி.
ஆனால், கார்டனுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஆலோசகர் ஒருவர், தி.மு.க. மேடையில் புயலின் பேச்சுக்கள் கட்சிக்காரர்களை விசிலடிக்க வைத்தாலும், மக்களை முகம் சுளிக்க வைத்ததை சுட்டிக் காட்டியிருக்கிறார். உண்மையில் வடிவேலுவின் பிரச்சாரம் தி.மு.க.-வுக்கு பேக்-ஃபயர் பண்ணியதுதான் அதிகம் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால், வடிவேலுவின் கால்ஷீட்டை யூஸ் பண்ணுவதா, வேண்டாமா என்ற குழப்பம் கார்டனில் இருந்தது.
திடீரென இப்போது ஏன் புயல் அ.தி.மு.க.-வில் மையம் கொள்ளப்போவதாக வதந்தி பரபரக்கிறது? அதைத்தான் டபுள்-ஃபயரிங் விவகாரம் என்று குறிப்பிட்டிருந்தோம். இரண்டு நோக்கங்களுக்காக இந்த வதந்தி திட்டமிட்டு இப்போது பரப்பப்பட்டுள்ளது. (வதந்தி தோன்றியதே அ.தி.மு.க. சப்போர்ட் மீடியாக்களில் என்பதைக் கவனிக்கவும்)
முதலாவது நோக்கம், வடிவேலுவின் வருகை தி.மு.க.-வுக்கு பேக்-ஃபயர் பண்ணியது போலவே, இங்கும் நெகட்டிவ்வாக முடியுமா என்று பார்ப்பதற்காக! இப்படியொரு வதந்தியைப் பரவ விட்டு, அதன்பின் மக்களின் பல்ஸ் பார்க்கும் உத்தி இது. மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கேட்டிருப்பார்கள்.
இரண்டாவது நோக்கம்?
திகார் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழி நாளை (சனிக்கிழமை) சென்னை வருவதாக உள்ளார். அவருக்கு பலமான வரவேற்பு கொடுக்க தி.மு.க.-வில் ஏற்பாடுகள் நடக்கின்றன. அடுத்த இரு தினங்களுக்கு கனிமொழியின்சென்னை விசிட்தான் பரபரப்பான நியூஸாக இருக்கக்கூடும்.
இது ஒரு short sensational event. காரணம், செவ்வாய்க்கிழமை கனிமொழி மீண்டும் விசாரணைக்காக டில்லி செல்ல வேண்டும். எனவே வெறும் இரண்டு நாள் பரபரப்புத்தான் அது.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், கனிமொழி மேட்டரின் பரபரப்பை குறைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அதை distract பண்ண வேண்டும்.
சினிமாவும், அரசியலும் ஒன்றாகக் கலந்துள்ள தமிழ்பேசும் நல்லுலகுக்கு, வடிவேலு மேட்டர் போன்ற அட்டகாசமான Distraction, வேறு என்ன சார் கிடைக்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக